Wednesday, 11 August 2021

வேட்டுவர் வரலாறு

 வேட்டுவர் வரலாறு

    வேட்டுவர் இனத்தை பற்றி வரலாற்று அறிவு இல்லாதவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் :
கொங்கு வீர பெருங்குடியினரான வேட்டுவரிடையே பல குலங்கள் (கூட்டப் பிரிவுகள்) ஏற்பட்டன. இவை எதனை என்பதை நாம் அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலாது. எனவே தான் வேர் வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை என்ன முடியாது எனும் முதுமொழியும் ஏற்படுள்ளது. நடுகற்கள், கல்வெட்டுகள், செப்பெடுகள், ஓலைசுவடிகள், , இலக்கியம், சோழர் பூர்வ பட்டயம்,சங்க இலக்கியங்கள் ஆகியவை மூலம் அறியப்...படுகின்ற குலங்களின் பெயர்கள் இருக்கிறது . வேட்டுவர்கள் குலபிரிவுகள் அடிப்படையிலும் பல பகுதியாக பிரிந்து வாழ்தனர். சிலர் தாம் எந்த ஊரிலிருந்துகுடி பெயர்ந்தனரோ அந்த மன்னனின் (ஊரின்) பெயரைத் தமது குலத்திற்கு (கூட்டம்) வைத்துக் கொண்டனர். பலர், கொடை வீரம், மாண்பு, விலங்குகள், பறவைகள், மரம், செடி, கோடி, சங்க கால தலைவர்கள், பெண்பாற் புலவர்கள்,நில பெயர்கள் ,கடவுள் பெயர்கள்,பொருள் பெயர்கள் ஆகியவற்றியையும் தமது குலபிரிவுகளாக கொண்டனர். வேட்டுவர் கலிவெண்பா வேட்டுவர் சமுதாயக் குலங்களை அதன் பெருமைகளுடன் தொகுத்து கூறுகிறது .
இன குழுவுக்குள் சகோதர உறவுடைய ஒரே கூட்டத்தை சார்ந்தவர்கள் தம் கூட்டத்தை சார்ந்த பெண்ணை தம் சகோதரியாக கருதி மண உறவு கொள்வதை தவிர்த்து ,புற கூட்டத்தில் இருந்து பெண் கொண்டனர் .இதுவே புறமண முறையாகும்.அந்நியரான பிற இன குழுக்களோடு மண உறவு கொள்வதை தவிர்த்து தம்இன குழுவிற்கு உள்ளாகவே மண உறவு கொண்டனர் .இதுவே அகமண முறையாகும்.
காடை வேட்டுவ குலம் பிளவு பட்டு சிவகாடை வேட்டுவ குலம்,குறுங்காடை வேட்டுவ குலம் ,சாகாடை வேட்டுவ குலம் போன்ற வேட்டுவ குலங்கள் தோன்றிஇருக்கிறது.
அண்ட வேட்டுவ குலம் பிளவு பட்டு அண்டவாணி வேட்டுவ குலம் ,கரு அண்ட வேட்டுவ குலம் போன்ற வேட்டுவ குலங்கள் தோன்றிஇருக்கிறது.
கீர வேட்டுவ குலமும் ,ஆந்தை வேட்டுவ குலமும் இணைந்து கீரந்தை வேட்டுவ குலம் தோன்றி இருக்கிறது.
பூச்சன் வேட்டுவ குலமும் ,ஆந்தை வேட்டுவ குலமும் இணைந்து பூச்சந்தை வேட்டுவ குலம் தோன்றி இருக்கிறது .
இது போல பல வேட்டுவ குலங்கள் இருக்கிறது.
பண்ண வேட்டுவ குலத்தின் குல தெய்வம் பண்ணை அம்மன் (ஏலூர்,நாமக்கல் ) ஆகும் .இன்று பண்ண வேட்டுவ குலத்தினர் ,கரடி வேட்டுவ குலத்தோடு இணைந்து விட்டார்கள் .
இது போல பல வேட்டுவ குலங்கள் இருக்கிறது .
தேவேந்திர வேட்டுவ குலமும் ,பள்ளர் சாதியையும் ஒரே சாதி கிடையாது .பெருமாள் வேட்டுவ குலம்,குமரன் வேட்டுவ குலம் ,சுப்பரமணி வேட்டுவ குலம் ,முட்டை வேட்டுவ குலம் ,மாகாளி வேட்டுவ குலம் ,மோக்காளி வேட்டுவ குலம் ,முட காளி வேட்டுவ குலம் போன்ற வேட்டுவ குலத்தவர்கள் கடவுள் பெயரை தமது கூட்டத்திற்கு வைத்து கொண்டன .
பறை -இசைகருவி பெயர். இசை கருவி பெயரை கூட்ட பெயராக வைத்து கொண்டவர்கள் தான் பறை வேட்டுவ குலம். பறை வேட்டுவ குலமும் ,பறையர் சாதியையும் ஒரே சாதி கிடையாது .
பள்ளம் -சம நிலத்தில் இருக்கும் தாழ்ந்த நிலம். நிலத்தின் பெயரை வைத்து கொண்டவர்கள் தான் பள்ள வேட்டுவ குலம் .பள்ள வேட்டுவ குலமும் ,பள்ளர் சாதியையும் ஒரே சாதி கிடையாது .
குடுமி(குடும அல்லது தென்குடும) வேட்டுவ குலத்துக்கும் ,பள்ளர் சாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கரைய -காவேரி ஆறு கரை பெயர் .இந்த காவேரி ஆறு கரை பெயரை கூட்ட பெயராக கொண்டவர்கள் கரைய வேட்டுவ குலம்.இந்த கரைய வேட்டுவ குலம் மேலை கரைய வேட்டுவ குலம் மற்றும் கீழை வேட்டுவ குலம் என்று பிரிந்து இருந்ததை கல்வெட்டுகள் மூலம் அறியலாம் . கரைய வேட்டுவ குலத்துக்கும் ,மீன் பிடிக்கும் சாதியையும் ஒரே சாதி கிடையாது .
வன்னி வேட்டுவ குலத்துக்கும் ,பள்ளி (வன்னியர் ) க்கும் எந்த சம்பந்தமும் இல்லை .
கள்ளை(கள்ள)-கள் என்று பொருள் .கள்ளை என்ற பெயரை கூட்ட பெயராக வைத்து கொண்டவர்கள் கள்ளை வேட்டுவ குலம் . கள்ளை வேட்டுவ குலமும் ,கள்ளர் சாதியையும் ஒரே சாதி கிடையாது .
உடையார் இனத்தில் 'மலையன் ' என்ற பெயரில் கல்வெட்டு இருக்கிறது . இது போல வேட்டுவ இனத்தில் 'மலைய வேட்டுவ குலம் 'இருப்பதை கல்வெட்டு (1968:226) கூறுகிறது . உடையார் இனமும் ,வேட்டுவ இனமும் ஒரே சாதி கிடையாது .
வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது கூட்டம் அல்லது குலம் கிடையாது .வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது வெள்ளாளர் களை பல கூட்டங்களாக பிரிக்கப்பட்டு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் வேட்டுவர் என்று கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது . இன்று வேட்டுவ குலத்துக்கும் ,வெள்ளாள குலத்துக்கும் 20 கூட்ட பெயர்கள் ஒன்றாக இருக்கிறது .இதற்கு காரணம் வெள்ளாளர்கள் ,பெருமைமிக்க வேட்டுவ கூட்ட பெயர்களை பார்த்து அதே கூட்ட பெயர்களை வைத்து கொண்டார்கள் .
உதாரணம்:
'....குறுந் காடை வேட்டுவரில் சின்னன் ..., (ஈரோடு,உஞ்சலுர் கல்வெட்டு ). '...கொங்கத்து எழுமாத்தூர் இருந்து வாழும் சா காட சிற்றன்...'
(செங்கம் நடுகற்கள் 1971/73) இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை . இது போலத்தான் மற்ற குலங்கள்.
அந்துவ வேட்டுவ குலத்தினர் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்தவர்கள் அந்துவ வெள்ளாளர் என அழைக்கபட்டன .
காடை வேட்டுவ குலத்தினர் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்தவர்கள் காடை வெள்ளாளர் என அழைக்கபட்டன .
இதுபோல 20 குலங்கள் இருக்கிறது .
வேட்டுவ குலத்தவர்களும் (வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் ,புன்னம் வேட்டுவ கவுண்டர் ),வெள்ளாள குலத்தவர்களும் (வெள்ளாள கவுண்டர் ) ஒரே சாதி கிடையாது .

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...