Sunday 9 August 2015

india



Aam Aadmi Party Tamil Nadu's photo.

   ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னுடையது என்று சொல்லாமல் சொல்லியபடி விழா மேடையில் கூடவே அமர்ந்திருந்தார் அதானி என்றழைக்கப்படும் கவுதம் அதானி.
ஆஸ்திரேலியாவில் ஜி-20 நாடுகளின் மாநாட்டிற்கு செல்வ தாக மோடி கூறினாலும், அங்கே குவின்ஸ்லாந்தில் உள்ள கார் மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானிக்கு வாங்கித் தருவதும், அங்கே வெட்டி எடுக்கப்படும் நிலக் கரியை ஏற்றுமதி செய்வதற்குரிய ரயில் வழித்தடம் மற்றும் துறைமுக வசதிகளை அந்த மாநில அரசைக் கொண்டே ஏற்பாடு செய்வதும் தான் அவரது பயணத்திட்டத்தின் முக்கிய அஜெண்டாவாக இருந்துள்ளது.
அதானி ஆஸ்திரேலியாவிலேயே சுரங்கம் வாங்கி விட்டதால் இந் தியா வல்லரசாகி விட்டது என்று மோடியின் பக்தர்கள் பூரித்து புளங்காகிதம் அடையக்கூடும். யாருடைய பணத்தைக் கொடுத்து சுரங்கத்தை வாங்கினார் என்பது முக்கியமல்லவா?சுரங்கத்தை வாங்குவதற்கு பாரத ஸ்டேட் வங்கி அதானிக்கு ரூ. 6200 கோடி கடன் கொடுத்திருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை அதுவும் வெளிநாட்டில் சுரங்கம் வாங்குவதற்காக வேறு எந்த முதலாளிக்கும் எந்த வங்கியும் கடனாக கொடுத்த தில்லை. ராயல் பாங்க் ஆப் ஸ்காட் லாந்து, டாயிஷ்வங்கி, எச்.எஸ்.பி.சி உள்ளிட்ட எந்த பன்னாட்டு வங்கியும் கடன் தர மறுத்த நிலையில்தான் பாரத ஸ்டேட் வங்கி கடன் கொடுத்திருக்கிறது. அதாவது கொடுக்குமாறு நிர்பந்திக்கப் பட்டிருக்கிறது.பன்னாட்டு வங்கிகள் அதானிக்கு கடன் தர மறுத்ததற்கான காரணம் தான் என்ன? முதலாவதாக, இந்தச் சுரங்கமும், நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்கான `அப்பாட் பாயின்ட்’ துறைமுகமும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை “கிரேட் பாரியர்” என்றழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் தொடருக்கு இந்த சுரங்கமும், அதற்காக அமைக்கப்படவுள்ள துறைமுகமும் அழிவைக் கொண்டுவரும்.
இரண் டாவதாக நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான செலவு மிக அதிக மாக இருக்கும் என்பதால் இது இலாபகரமான தொழிலாக இருக்காது. மூன்றாவதாக மிகவும் முக்கியமாக அதானி நிறுவனத்தின் தற்போதைய மொத்தக்கடன் 81 ஆயிரத்து 122 கோடிகள். அதானி இந்தக் கடனை அடைப்பதற்கான வாய்ப்பு கிடையவே கிடையாது. இந்தக் கடனுக்கு நிகரான சொத்து மதிப்பும் அதானிக்கு இல்லை. எனவே இந்த 6 ஆயிரத்து 200 கோடியும் வாராக் கடனாக மாறும் வாய்ப்பே அதிகம் என்பது பன்னாட்டு வங்கிகளின் துல்லியமான மதிப்பீடு. எனவேதான் அவை கடன் தர மறுத்துள்ளன.இவ்வளவு பெரியத்தொகையை, இந்த காரண காரியங்களையெல்லாம் மீறி கடனாக கொடுத்திருக்கும் பொதுத்துறை வங்கி, எந்த நம்பிக்கை யில் கடன் கொடுக்கிறோமென்று விளக்கமளிக்க வேண்டுமல்லவா? கடன் ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் குரலெழுப்பியும் விவரங்களை தர மறுக்கிறது ஸ்டேட் வங்கி. “வங்கிகள் கடன் கொடுப்பதை யெல்லாம் பொது மக்கள் விவாதத்துக்கா உட்படுத்த முடியும்?”
என்று ஆணவமாக கேட்கிறார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. இவ்விசயத்தில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றும் பதியப்பட்டுள்ளது.மத்திய சிறு மற்றும் குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா சமீபத்தில் பேசியிருக்கும் பேச்சு. நிதியமைச்சரின் கேள்விக்கு உரிய பதிலாக அமைந்துள்ளது. சிறு,குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுப்பதாகவும், கடன் அவசியம் வழங்க வேண்டுமென ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை புறக்கணிப்பதாகவும், இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், பதிலுக்கு காத்திருப்பதாகவும் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார். “இதற்கெல்லாம் பதிலளிக்க தேவையில்லை” என்பது தான் ஜெட்லி ஏற்கனவே அளித்திருக்கும் பதிலின் பொருள்.அதானிக்கு கொடுக்கப்பட்டிருக் கும் கடன் என்பது இப்போது வெளியே தெரிகின்ற ஒரு சலுகை மட்டுமே. அங்கே ஆண்டொன்றுக்கு 60 மில்லியன் டன் நிலக்கரி எடுப்பது அதானியின் திட்டம். 2016-17 ஆம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் நிலக்கரி பற்றாக்குறை 185 முதல் 265 மில்லியன் டன்னாக இருக்கும் என்பது இந்திய அரசின் மதிப்பீடு. அதானியின் நிலக்கரியை சர்வதேச சந்தை விலையில் இந்தியா இறக்கு மதி செய்யும் என்பதை சொல்லவும் வேண்டுமா?
நிலக்கரியின் சர்வ தேச சந்தைவிலை குறைந்து போகும்பட்சத்தில், அதானி சொன்ன விலைக் குத்தான் இந்திய அரசு நிலக்கரியை வாங்கும். இது நடக்கவிருக்கும் கொள்ளையின் ஒரு பரிமாணம் மட்டுந்தான்.2002ல் குஜராத்தில் மோடியின் ஆட்சி துவங்கியபோது அதானி குழுமம் நடத்திய வணிகத்தின் மொத்தமதிப்பு ரூ.3 ஆயிரத்து 741 கோடிகள் மட்டும், 2014ல் ரூ.75 ஆயிரத்து 659 கோடி அதாவது 12 ஆண்டுகளில் 20 மடங்கு வளர்ச்சி.
அன்று குஜராத் விலைக்கு போனது ...
இன்று இந்தியா விலைக்கு போகிறது ... அதானியிடம்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...