பார்ப்பன ஆண்டு உருவான கேடுகெட்ட வரலாறு
கண்ணன் 60,000 பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கே சென்ற நாரதனுக்கும் ஆசை வந்துவிடவே, கண்ணா, நீயே எல்லாப் பெண்களையும் அனுபவிக்கிறாயே? எனக்கொரு பெண்ணை தரக்கூடாதா? என்று கேட்டான். கண்ணனும் ‘சரி. இந்த ஊருக்குள் நான் இல்லாத வீட்டிற்குள் இருக்கின்ற பெண்ணை நீ அனுபவித்துக் கொள்’ என்று அனுமதித்தான்.
நாரதனும் ஒவ்வொரு வீடாய்ச் செல்ல, எல்லா வீட்டிலும் கண்ணன் காட்சியளித்தான். வெறுத்துப் போன நாரதன் தானே பெண்ணாகி பாலியலுக்கு உள்ளாகி பல குழந்தைகளைப் பெற்றெடுக்க, அந்தக் குழந்தைகளின் பெயர்கள்தான் இன்றைக்கு தமிழ் ஆண்டுகள் எனப்படுகிற பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள். மேலும் அந்த 60 பெயர்களில் ஒன்றுகூட தமிழில் இல்லை. எல்லாம் சமற்கிருதப் பெயர்களே. சைத்ரா முதல் பகுனா வரை உள்ள சமற்கிருத மாதங்களே தமிழில் சித்திரை முதல் பங்குனி வரை என இடம் மாறியுள்ளன. இப்படி இட்டுக்கட்டி தமிழர் பண்பாட்டையும், பெண்களையும் இழிவுபடுத்துகின்ற இந்த
60 ஆண்டு முறைகளையும் 12 மாதங்களையும் இனியும் நாம் பின்பற்றத்தான் வேண்டுமா?
தமிழர் ஆண்டு உருவான வரலாறு
எனவேதான் தமிழறிஞர்கள் தி.பி. 1952ஆம் ஆண்டு ஒன்றுகூடி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது என்றும் சுறவம் (தை) திங்களை தமிழ் ஆண்டுப் பிறப்பாகவும், சுறவம் முதல் சிலை வரை தமிழ் மாதங்களாகப் பின்பற்றுவது எனவும் முடிவு செய்தனர். தமிழ்நாடு அரசு திபி. 2002ல் இருந்து தமிழ் ஆண்டாக அறிவித்துவிட்டு சமற்கிருத ஆண்டையே பின்பற்றி வருகிறது. ஆனால் தமிழ்த் தேசிய அமைப்புகள் முறையாக தமிழ் ஆண்டு, மாதத்தை பின்பற்றி வருகிறார்கள். இவற்றை தமிழக மக்கள், தமிழக அரசு ஏற்பு நாளாகக் கொள்வது எப்போது?
ஞாயிறு என்ற கதிரவக் கோளின் ஒளித் தொடக்கமாகவும், காரி என்ற இருளின் முடிவு காரிக்கிழமையாகவும் தொடர் ஏழு நாள் ஒரு கிழமையாக இயற்கையின் வழி விஞ்ஞான அடிப்படையில் தீர்மானித்து தந்துள்ளனர் நம் தமிழ் மூதாதையர்கள். மற்ற இனத்தின் கிழமையின் நாள் மொழி பெயர்ப்பே ஆகும்.
தமிழ் திங்களுக்கான விளக்கம்
1. சுறவம் என்னும் மாதம் முழுவதும் உடுகதிர் சுறாமீன் போல் தொடர், கதிர் ஒளிவட்டம் அமைந்துள்ளது. அதனால் இம்மாதத்தை சுறவம் மாதம் என்று பெயரிட்டு உள்ளனர்.
2. கும்பம் என்னும் மாதம் முழுவதும் உடுகதிர் கும்பம் போல் தொடர் கதிர் ஒளி வட்டம் அமைந்துள்ளது. அதனால் இம்மாதத்தை கும்பம் மாதம் என்று பெயரிட்டு உள்ளனர்.
3. மீனம் என்னும் மாதம் முழுவதும் உடுகதிர் மீன்போல் தொடர் கதிர் ஒளிவட்டம் தெரியும். அதனால் இம்மாதத்தை மீனம் மாதம் எனப் பெயரிட்டு உள்ளனர்.
4. மேழம் என்னும் மாதம் முழுவதும் உடுகதிர் ஆடுபோல் தொடர் கதிர் ஒளிவட்டம் தெரியும். அதனால் இம்மாதத்தை மேழம் மாதம் என்று பெயரிட்டுள்ளனர்.
5. விடை என்னும் மாதம் முழுவதும் உடுகதிர் எருதுபோல் தொடர்கதிர் இருள் ஒளிவட்டம் தெரியும். அதனால் இம்மாதத்தை விடை மாதம் எனப் பெயரிட்டு உள்ளனர்.
6. ஆடவை என்னும் மாதம் முழுவதும் உடுகதிர் ஆடவைபோல் தொடர்கதிர் ஒளிவட்டம் தெரியும். அதனால் இம்மாதத்தை ஆடவை மாதம் எனப் பெயரிட்டுள்ளனர்.
7. கடகம் என்னும் மாதம் முழுவதும் உடுகதிர் கடகம் போல் (நண்டு) தொடர் கதிர் ஒளிவட்டம் தெரியும். அதனால் இம் மாதத்தை கடகம் மாதம் எனப் பெயரிட்டுள்ளனர்.
8. மடங்கல் என்னும் மாதம் முழுவதும் உடுகதிர் மடங்கல் போல் (அரிமா) தொடர்கதிர் ஒளிவட்டம் தெரியும். அதனால் இம்மாதத்தை மடங்கல் மாதம் எனப் பெயரிட்டுள்ளனர்.
9. கன்னி என்னும் மாதம் முழுவதும் உடுகதிர் ஒரு பெண் வளைந்து கையை உயர்த்துவது போல உள்ளது. இந்நிகழ்வை கன்னி மாதம் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
10. துலை என்னும் மாதம் முழுவதும் உடுகதிர் துலைபோல் (துலாக்கோல்) தராசு தொடர் கதிர் ஒளிவட்டம் தெரியும். அதனால் இம்மாதத்தை துலை மாதம் எனப் பெயரிட்டுள்ளனர்.
11. நளி என்னும் மாதம் முழுவதும் உடுகதிர் நளிபோல் (தேள்) தொடர் கதிர் ஒளி வட்டம் தெரியும். அதனால் இம்மாதத்தை நளி மாதம் எனப் பெயரிட்டுள்ளனர்.
12. சிலை என்னும் மாதம் முழுவதும் உடுகதிர் சிலை போல் தொடர் கதிர் ஒளி வட்டம் தெரியும். அதனால் இம்மாதத்தை சிலை மாதம் எனப் பெயரிட்டுள்ளனர்.
சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு என்றும், சித்திரை முதல் பங்குனி வரை உள்ள
12 மாதங்கள், பிரபவ முதல் அட்சய வரையுள்ள 60 ஆண்டுகளும் தமிழ்தான் என்று தகுந்த இலக்கிய, இலக்கண, வரலாற்றுச் சான்றுகளுடன் நிறுவினால் எமது அறக்கட்டளையின் மூலம் (உரூபா 1,00,00,000) ஒரு கோடி உரூபா பரிசாக வழங்கப்படும்.
சமற்கிருத பார்ப்பனீய ஆண்டுகள்
ஆரியர்களுக்கு தாய்மொழியும், தாய்நாடும் இல்லாததால் தந்தையர் வழி சென்று நாடோடிகளாக வாழ்ந்ததால் தமிழகத்தில் அடைக் கலம் புகுந்து தமிழினத் தொன்மத்தை சிதைத்து, அழித்து அறுபது ஆண்டு முறையை திணித்து, நம் இனத்தை அடிமைப்படுத்தி ஆளுமை செய்து வருகின்றனர். 1. பிரபவ, 2. விபத, 3. சுக்கில், 4. பிரமோதூத, 5. பிரசோத்பத்தி, 6. ஆங்கிரச, 7. சபானு, 8. பவ, 9. சிறிமுக, 10. யுவ, 11. தாது, 12. ஈசுவர, 13. வெகுதான்ய, 14. பிரமாதி, 15. விக்ரம், 16. விசூ, 17. சித்ரா, 18. தாரண, 19. பார்த்தி, 20. விய, 21. சர்வசித்து, 22. சர்வதாரி, 23. விரோதி, 24. விக்ருதி, 25. கர, 26. நசந்தன, 27. விரய, 28. சய, 29. மன்மத, 30. துன்முதி, 31. கேவிளம்பி, 32. விளம்பி, 33. விதாரி, 34. சார்வரி, 35. பிலவ, 36. சுபகிருது, 37. சோயகிருது, 38. குரோதி, 39. வசுவாவசூ, 40. பராவவ, 41. பிலவங்க, 42. சீலக, 43. இராசச, 44. செலமிய, 45. சாதாரண, 46. பிரோதகிருதி, 47. பரிதாபி, 48. பிரமாதீச, 49. ஆநந்த, 50. நள, 51. பிங்கள, 52. காளயுத்தி, 53. சித்தார்த்தி, 54. இரெத்திரி, 55. துன்மதி, 56. துந்துபி, 57. ருத்தோத்காரி, 58. இரக்தாசா, 59. கரோதன, 60. அட்சய.
கிருட்டிணனுக்கும், நாரதனுக்கும் (இரு ஆண்களுக்கும்) பிறந்த 60 குழந்தை களின் பெயர்களே பார்ப்பனீய ஆரிய ஆண்டுக் கணக்கு. இதில் ஒன்றுகூட தமிழ்ப் பெயர் இல்லை.
ஒவ்வொரு செயலிலும் வரவு செலவு பார்க்கும் நாம் மேற்கண்ட ஆண்டுகளை பின்பற்-றுவதால் நமக்கு ஏற்படும் வரவு (நன்மை) என்ன? என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா? மேற்கண்ட 60 ஆண்டுகளின் அடிப்படையில் நம் வரலாற்றை எப்படி கணக்கீடு செய்வது? இவற்றையே நம் மக்கள் காலங்காலமாக பின்பற்றி வருவதால் இவைதான் தமிழ் ஆண்டுகள் என்கிற தவறான புரிதலுக்கு உள்ளாகிறார்கள். இவற்றை மாற்ற வேண்டாம் என்றும் முட்டாள்தனமாக போராடுகிறார்கள்.
ஒருவர் மதுபோதைக்கு ஆளாக்கப்பட்டு அனைத்தையும் இழந்து தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பவரை திருத்தி அவருக்கு நல்வழிகாட்டி அவரையும், அவர்தம் குடும்பத்தையும் வாழ வைக்க முயன்றால், அவர் மீண்டும் போதையிலேயே விழுந்து, ‘நான் மட்டும் குடிக்கவில்லை. என் முப்பாட்டன் குடித்தார். பாட்டன் குடித்தார். தாத்தா குடித்தார். அப்பா குடித்தார். இப்போது நான் குடிக்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது’ என்று தனது செயலை நியாயப்படுத்திப் பேசுவதால் அவர் உருப்பட முடியுமா?
சமணர் பிறப்பை வைத்து செயினர் ஆண்டு முறையை பின்பற்றுகின்றனர்.
புத்தர் பிறப்பை வைத்து பவுத்தம் ஆண்டு முறையை பின்பற்றுகின்றனர்.
ஏசு பிறப்பை வைத்து கிறித்துவ ஆண்டு முறையை பின்பற்றுகின்றனர்.
நபிகள் பிறப்பை வைத்து இசுலாமியர் ஆண்டு முறையை பின்பற்றுகின்றனர்.
குருநானக் பிறப்பை வைத்து சீக்கியர் ஆண்டு முறையை பின்பற்றுகின்றனர்.
நாம் திருவள்ளுவர் பிறப்பை வைத்து ஏன் தமிழர் ஆண்டு முறையை பின்பற்றக் கூடாது? இதனால் யாருக்கு நன்மை, யாருக்கு தீமை என்பதை ஆராய்ந்து முடிவெடுப்போம்! தமிழ் இனம் காப்போம்

No comments:
Post a Comment