Sunday, 9 August 2015

திட்டமிட்டு உருவாக்கப்படும் இனவெறி


                                 திட்டமிட்டு உருவாக்கப்படும் இனவெறி


Mugilan Swamiyathal's photo.

தமிழர்களை தண்ணீருக்கு ஏங்க வைத்துள்ள
இந்திய அரசு கட்டமைப்பு ....
திட்டமிட்டு உருவாக்கப்படும் இனவெறி...
========================================
தமிழரின் பாரம்பரிய நிலத்தை அண்டை தேசிய இனங்களுக்கு
வலுக்கட்டாயமாக தாரை வார்த்துக் கொடுத்து, தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் எப்போதும் தமிழகத்திடம் இருந்து பெற்ற நிலங்களை (சலுகைகளை)பாதுகாக்க, தமிழகத்திடம் இனவெறி போக்கோடு நடந்து வருகிறது.
இந்திய அரசு அண்டை தேசிய இனங்களுக்குள் மோதலை உருவாக்கி, இவைகள் நட்பாக அன்றி எப்போதும் பகையாக நடக்க வைத்து வருகிறது. இந்த போக்கு அணையாமல் இருக்க இந்திய அரசு எண்ணெய் ஊற்றி எப்போதும் வளர்த்து வருகிறது.
இந்திய அரசு திட்டமிட்டு மொழிவழி மாநிலங்களை
கட்டமைத்தது போலவே, இந்திய அரசின் சுரண்டலுக்கு எதிரான மனநிலையை தேசிய இனங்களுக்குள் ஏற்படாமல் தடுத்து நிறுத்தி,
அண்டை தேசிய இனங்கள் தனக்குளேயே சண்டையிட வைத்து வருகிறது.
கேரளாவிற்கும்,கர்நாடகாவிற்கும்,ஆந்திரத்திற்கும்
தமிழர் நிலத்தில் இருந்து பிடுங்கி இந்திய அரசு மின்சாரம் கொடுக்கிறது.
ஆனால் தமிழகத்திற்கு, அண்டை மாநிலங்களில் இருந்து நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை அவைகள் தருவதற்கும், தமிழகம் பெறுவதற்கும் கூட, இந்திய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது.
இந்திய அரசியல் அமைப்பு தமிழர்களுக்கு எதிராகவே எப்போதும் இருக்கிறது என்பதற்கு, இதை விட வேறு என்ன சான்று நமக்கு தேவைப்படுகிறது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...