Sunday, 9 August 2015

துரோகம்

                                                   துரோகம் 
Seethaiyin Maindhan's photo.

வடுகன் திருமலை நாயக்கனிடம் தளவாயாக இருந்த வடுகப்பார்ப்பான் ராமப்பய்யன் தமிழினப் பகைவன் எனபது தமிழர்கள் அறிந்ததே.இப்போது இந்த ராமப்பய்யன் எனது மூதாதை என்று சுப்ரமணியசாமி டுவிட்டரில் தெரிவித்திருப்பதன் மூலம் இந்த சுப்ரமண்யசாமி தமிழர்களின் பரம்பரைப் பகைவன் எனபது உறுதியாகி விட்டது.
டுவிட்டரில் சுப்ரமணியசாமி வெளியிட்ட தகவல்:
"எனது மூதாதை ராமப்பய்யர் என்பவர் மதுரை மன்னர் திருமலை நாயக்கரிடம் பிரதானியாகவும் தளபதியாகவும் இருந்தார். அவர்தான் ராமநாதபுரத்திலிருந்து மைசூர் வரை பரவியிருந்த இசுலாமிய ஆட்சிகளை அகற்றினார். அவர்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து மைசூர் வரை இந்து சாம்ராஜ்யத்தை மீள் உருவாக்கம் செய்தார்."
தனது முப்பாட்டன் ராமப்பையனைப் பற்றி சுப்ரமணியசாமி சொன்ன மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சுத்தப் பொய். ராமப்பய்யனைப் பற்றி உண்மையான, ஆதாரபூர்வமான, வரலாற்றுத் தகவல்களை கீழே தந்துள்ளேன்.
தகவல் 1

பீஜப்பூர் சுல்தானிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு விஜய நகர அரசை வேலூரிலிருந்து அகற்றியவன் இந்த ராமப்பய்யன்.
ராமப்பய்யன் தளபதியாயிருந்த திருமலை நாயக்கனின் முப்பாட்டன் விஸ்வநாத நாயக்கனை கி.பி. 1530 ஆம் ஆண்டு மதுரை மன்னனாக்கி அழகு பார்த்தவன் விஜய நகரத்தை ஆண்ட துளுவ வம்சத்தை சேர்ந்த காப்பு பலீஜாவான கிருஷ்ணதேவராயன். இந்த கிருஷ்ண தேவராயனின் தம்பி மகனான சதாசிவ ராயர் விஜய நகர மன்னனாக இருந்தபோது அஹமது நகர், பீறார், பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார் ஆகிய 5 சுல்தான்களும் விஜய நகரின்மீது படை எடுத்தார்கள். 1565 ஜனவரி 23ல் இப்போரில் சதாசிவராயர் தோற்கடிக்கப்பட்டார். விஜய நகரம் முற்றுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டது.
தப்பியோடிய சதாசிவ ராயர் வடபெண்ணை நதிக்கரையிலிருந்த பெனுகொன்டாவை தலைநகராக்கி அங்கிருந்து ஆண்டார்.
கி.பி. 1601ல் பெனுகொன்டாவை தலை நகராகக் கொண்டு ஆண்ட விஜய நகர மன்னன் இரண்டாம் வேங்கடவன் மீது பீஜப்பூர் சுல்தான் படையெடுத்து தோற்கடித்தான். பெனுகொன்டாவை விட்டு வெளியேறிய இரண்டாம் வேங்கடவன் வேலூருக்கு வந்து வேலூரை தலை நகராகக் கொண்டு ஆளத் தொடங்கினான். அன்று முதல் வேலூர் ராயர்வேலூர் ஆனது. விஜய நகர அரசின் தலை நகராகவும் ஆனது. கி.பி. 1649ல் வேலூரை தலை நகராகக் கொண்டு ஆண்ட விஜய நகர மன்னன் ஸ்ரீரங்கன் மீது மீண்டும் பீஜப்பூர் சுல்தான் படையெடுத்து வந்து அவனை வென்று வெளியேற்றினான். அதோடு விஜய நகர சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. கடைசி விஜய நகர மன்னன் ஸ்ரீரங்கன் நிற்க நிழல் இன்றி அனாதையாக அலைந்து தெரிந்து இறந்து போனான். ஆற்காடு துருக்கியர் வசமாயிற்று. இம்முறைதான் துருக்கியர் தமிழகத்தில் வலுவாக காலூன்றினர்.
அந்த சமயத்தில் மதுரையை ஆண்டவன் திருமலை நாயக்கன். அவனது தளபதி ராமப்பய்யன். கிருஷ்ண தேவராயனிடம் அடப்பக்காரனாய் இருந்த தன் முப்பாட்டன் விஸ்வநாதனை மதுரை மன்னனாக்கிய கிருஷ்ண தேவராயனின் வழித்தோன்றல் ஸ்ரீரங்கனுக்கு ஆபத்து என்றவுடன் திருமலை நாயக்கன் ஓடிப்போய் உதவியிருக்க வேண்டாமா? உதவி செய்யவில்லை என்பதோடு இதில் கொடுமை என்னவென்றால் பீஜப்பூர் சுல்தானிடம் கையூட்டு பெற்றுக்கொண்ட வடுகப் பார்ப்பான் ராமப்பய்யாவின் பேச்சை கேட்டு பீஜப்பூர் சுல்தானை வேலூரின்மீது படையெடுக்க செய்து விஜய நகர பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தவனே இந்த திருமலை நாயக்கன்தான்.
இவ்வாறு பீஜப்பூர் சுல்தானிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு திருமலை நாயக்கர் மூலம் விஜய நகர இந்து அரசை முடிவுக்கு கொண்டு வந்த இந்த ராமப்பய்யன்தான் ராமநாதபுரத்திலிருந்து மைசூர் வரை இஸ்லாமிய அரசுகளை அகற்றினான் என சுப்ரமணியசாமி அண்டப்புளுகை ஆகாசப்புளுகை டுவிட்டர் மூலமாக புளுகியுள்ளார்.
தகவல் 2

கோவாவிலிருந்த போர்த்துகீசியரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு திருமலை நாயக்கனை தூண்டி விட்டு ராமநாதபுரம் சேதுபதி மீது படைஎடுக்கச் செய்து சேது சீமையை பலவீனப்படுத்தி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கிறிஸ்துவ மதம் பரவ காரனமாயிருந்தவனும் இந்த ராமப்பய்யனே.
இந்த ராமப்பய்யன் திருமலை நாயக்கனிடம் தளபதியாக யிருந்தபோது ராமநாதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னர் தளவாய் சேதுபதி என்ற இரண்டாம் சடைக்கண் சேதுபதி. இந்த சேதுபதிகள் சைவ வைணவ கோயில்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கில் ஐயனார் கோயில்களையும், புதுப்பித்தும் புதிதாக கட்டியும் சைவ, வணைவ ஆகம வழிபாடுகளோடு ஐயனார் வழிபாடும் ராமநாதபுரம் சீமை எங்கும் சிறந்து விளங்கச் செய்தனர். வட நாட்டிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டு பாதுகாப்போடு திரும்புவதற்கு ராமநாதபுரம் சேதுபதியின் ஆட்சியே காரணமாக இருந்தது. மேலும் தென்னிந்தியாவின் மேற்கு கரையில் கோவாவில் காலூன்றிவிட்ட போர்த்துகீசியர்கள் தமிழக கடற்கரை ஓரங்களில் காலூன்ற விடாமல் சேது நாடுதான் தடுத்து வந்தது.
சுப்ரமணிய சாமியின் மூதாதை ஆன இந்த வடுகப் பார்ப்பான் ராமப்பய்யன் என்ன செய்தான் தெரியுமா? கோவா சென்று அங்குள்ள போர்துகீசியருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, அவர்களிடம் கணிசமான தொகையையும் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு மதுரை திரும்பி மறவர் சீமை வலுவடைந்து விட்டால் அது மதுரை நாயக்கர் அரசுக்கு எதிர்காலத்தில் பேராபத்தாகி விடும் என திருமலை மன்னனுக்கு தூபம் போட்டு ராமநாதபுரம் சேதுபதிமீது திருமலை நாயக்கனை படைஎடுக்கச் செய்தான். தமிழ்நாட்டிலுள்ள 72 பாளையங்களையும் சேர்ந்த பெரும் படையோடு இந்த ராமப்பய்யன் தலைமையில் சேது நாட்டிற்கு படையெடுத்து சென்றது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மறவர் படை தோற்றது. தளவாய் சேதுபதி சிறை பிடிக்கப்பட்டு மதுரையில் 4 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ராமநாதபுரம் மறவர் குல மக்கள் கிளர்ந்து எழுந்தனர். அவர்களின் எழுசியைக் கண்டு பயந்த திருமலை நாயக்கன் தளவாய் சேதுபதியை மீண்டும் ராமநாதபுரம் மன்னனாக்கினான். ஆனால் வடுகப் பார்ப்பான் ராமப்பய்யனின் சூழ்ச்சியின் காரணமாக சேதுச் சீமையில் வாரிசுப் போட்டி ஏற்படுத்தப்பட்டு சேது சீமை மூன்றாகப் பிரிக்கப்பட்டு அதன் ஆட்சியுரிமை மூன்று பேரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு ராமப்பய்யனால் ராமநாதபுரம் மறவர் சீமை திட்டமிட்டு பலவீனப்படுத்தப் பட்டது. அதன் காரணமாக கீழைக் கடல் எங்கும் போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கம் மேலோங்கி கரையோர மக்கள் கிறித்துவத்தை தழுவினார்கள். இவ்வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் போர்த்துக்கீசியர் ஆதிக்கமும் , கிறித்துவமும் வேரூன்ற காரணமாயிருந்தவன் மறவர் சீமையை பலவீனப் படுத்திய இந்த வடுகப் பார்ப்பான் ராமப்பய்யன்தான்!
தகவல் 3

ராமப்பய்யன் திருமலை மன்னனுக்கும் துரோகம் செய்தவன்.
இந்த வடுகப் பார்ப்பான் ராமப்பய்யன் மன்னன் திருமலை நாயக்கனுக்காவது விசுவாசமாக இருந்தானா என்றால் அதுவுமில்லை. மைசூர் உடையாருடன் திருமலை நாயக்கன் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது ஒருமுறை மைசூர் உடையாரிடம் திருமலை நாயக்கனை காட்டிக்கொடுக்க ஒரு பெருந்தொகையை பேரம் பேசிக்கொண்டிருந்தபோது, விருப்பாச்சி பாளையக்காரர் சின்னப்ப நாயக்கரிடம் கையும் களவுமாக பிடிபட்டு, அப்போது மதுரைப்படைக்கு தலைவராயிருந்த கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்னாவினால் அடித்து உதைத்து விரட்டப்பட்டான். அதன் பிறகு இரண்டாண்டுகள் கழித்து திருமலை நாயக்கனிடம் மீண்டும் போய் ஒட்டிக் கொண்டான். அந்த மடையன் திருமலை நாயக்கனும் இந்த ராமப்பய்யனை மீண்டும் மதுரை பிரதானியாக்கிக் கொண்டான்.
காசுக்காக எதையும் செய்யும் காதகன் தான் இந்த ராமப்பய்யன். அப்படியே அச்சுப் பிசகாமல் அவனைப் போலவே வந்திருக்கிறான் அவன் வழி வந்த இந்த சுப்ரமணிய சாமி.
அன்று வடுகப் பார்ப்பான் ராமப்பய்யன் அரவா வடுகன் திருமலை நாயக்கனோடு சேர்ந்து கொட்டமடித்தது போலவே அவன் வாரிசான இந்த வடுகப் பார்ப்பான் சுப்ரமணிய சாமி ஸ்ரீலங்கா வடுகன் ராஜபக்சேவுடன் சேர்ந்து கொட்டமடித்தான். புதிய அதிபர் சிறிசேனாவுடனும் சேர்ந்து இனி கொட்டமடிப்பான் இந்த சுப்ரமணிய சாமி. ஏனென்றால் சிறிசேனாவும் இன்னொரு ஸ்ரீலங்கா வடுகந்தானே?
துரோக தோலுரிப்பு இனியும் தொடரும்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...