காவிரிப்பூம்பட்டினம்....உலகின் மிகப்பழமையான நகரம்....!
இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும்" (மணிமேகலை 28 அடி 80-81
பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நிற்க வைக்கப்பட்டிருந்த துறைமுகம்.- காவிரிபூம்பட்டினம் !
கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம்.!
காவிரிபுகும்பட்டினம் என்பதே காவிரிபூம்பட்டினம் என மருவிற்று. காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்ததிருந்ததுதான் இந்த அழகிய நகரம்!! காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்!! இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது !!.
மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் "இந்திர விழா" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.
கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின எனவும், பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை எனவும் உலக ஆராய்ச்சியாளர்கள் முடிவு தெரிவிக்கிறார்கள். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.
வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போனார்கள். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறினார்கள்.
"இணையதளத்தில் கூகுள் மேப்பில் நீங்கள் பார்க்கலாம். இந்தியாவைச் சுற்றியிருக்கும் கடலோரப் பகுதி சில மைல் தூரம் வெளிர்நீல நிறத்திலும் அதைத்தாண்டிய பகுதிகள் கருநீல நிறத்திலும் இருக்கும். வெளிர்நீலப் பகுதிகள் ஆழம் குறைவானவை. அங்கே நிலம் மூழ்கியுள்ளது என்பதற்கு இன்று கூட பெரிய சான்று இருக்கிறது.
தேசிய
கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும்
பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப்
எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில்
மிதக்கும்போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. இந்த
ஆய்வில் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச், 8,9ல் கடலில்
மூழ்கியவர்கள் இரும்பு பீரங்கி, ஈயக்குண்டைக் கண்டுபிடித்தார்கள்.
எஸ்.ஆர்.ராவ் தலைமையில் வானகிரி பக்கத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்புடைய
ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
1991
மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட
வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு
முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை
மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி
விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத்
தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் 2 மீ.
உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர். அது புழுதியும்
சேறுமாக மூடப்பட்டிருந்தது. பின்னர் நிதிப்பற்றாக்குறையால் அகழாய்வு
தடைபட்டது.
கிரஹாம் ஹான்காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப்
புகழ்
பெற்ற
ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது
பல
கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில்
பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியவை.
இந்நிலையில், கடந்த
2000-ம்
ஆண்டு
இந்தியாவிற்கு வருகை
புரிந்த
கிரஹாம் ஹான்காக் என்பவர், தேசிய
ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றி
விவரங்களைக் கேட்டறிந்தார்.
கிரஹாம் ஹான்காக் |
நிதிப்பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதை அறிந்த
அவர்,
இங்கிலாந்தைச் சேர்ந்த "சானல் 4" என்ற பிரபல
தொலைக்காட்சி நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த "லர்னிங் சானல்" என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய
ஆழ்கடல் ஆராய்ச்சி கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001-ம்
ஆண்டு
ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
அந்த
ஆராய்ச்சிக்கு அதி
நவீன
"சைடு
ஸ்கேன்
சோனார்"
என்ற
கருவி
பயன்படுத்தப்பட்டது. இந்தக்
கருவி
பூம்புகார் கடற்பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட
அகலமான
தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய
ஒரு
பிரம்மாண்ட நகரம்
மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது.பின்னர், அக்காட்சிகளை கிரஹாம் ஹான்காக் நவீன
காமிராக்கள் மூலம்
படம்
எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக், அந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இந்த நகரம் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி இருக்கக்கூடும் என ஹான்காக் கருதினார்.தனது ஆராய்ச்சியைப் பற்றிய விவரங்களை அவர், இங்கிலாந்தின் புகழ்பெற்ற டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறைப் பேராசிரியர் கிளன் மில்னே என்பவரிடம் தெரிவித்தார். இதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிளன் மில்னே, ஹான்காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
இரண்டாம் மூன்றாம் கட்ட ஆய்வு, கடல் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது குளோபல் ப்ராஸசிங் சிஸ்டம் எனப்படும் ஜி.பி.எஸ். உட்பட ஐந்து வகையான கருவிகள் பயன்படுத்தப்பட்டன. Side scan sonar Fisher என்ற கருவியின் மூலம் கடலுக்கு அடியில் நிலப்பரப்பில் என்ன இருக்கிறது என்பதையும் (கட்டடம், மண் படிவங்கள், கப்பலின் சிதைந்த பகுதிகள் போன்றவை), Eco மூலம் அது எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதையும், –Mini Ranger மூலம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்யமுடியும்.
கடைசியாக
எஸ்.ஆர்.ராவ் தலைமையில் கடலுக்கு அடியில் விசாகப்பட்டினத்தில் இருந்து
வந்த டைவர்ஸ் (கடலில் மூழ்குபவர்கள்) உடன் நானும் டைவிங் செய்தேன்.
தொல்லியல் நிபுணர் செல்வராஜ். |
இந்தக்
கடலாய்வின்போது கடலுக்கு அடியில் 45 மீட்டர் நீளத்தில் 7 மீட்டர்
தூரத்தில் மண்படிவங்களைக் கண்டறிந்தோம். ஒரு படிவத்தை ஆய்வு செய்தபோது, அது
2 மீட்டர் சுற்றளவுக்குப் புழுதிகளால் மூடப்பட்டிருந்தது. கரையிலிருந்து
நாலரை கி.மீ. தூரத்தில் 67 அடி ஆழத்தில் மனிதர்களால் கட்டப்பட்ட கட்டடங்கள்
இன்றளவும் இருக்கின்றன. செம்பூரான் கற்களை வைத்து அடுக்கிக் கட்டப்பட்ட
கட்டடங்கள் அப்போது கண்டறியப்பட்டன. எங்களது ஆய்வின் போது எடுக்கப்பட்ட
வீடியோ மற்றும் புகைப்படங்கள் தமிழக கடலாராய்ச்சி நிறுவனத்திடம்
ஒப்படைக்கப்பட்டது" என்கிறார் தொல்லியல் நிபுணர் செல்வராஜ்.
இந்த ஆராய்ச்சி, தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான "மெசபடோமியா" பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது என தெரிவிக்கிறது.
இதன்மூலம் உலகில்
நவீன
நாகரிகம், பூம்புகார் நகரில்
11,500 ஆண்டுகளுக்கு முன்பு
தோன்றியது தெளிவாகிறது.
பூம்புகாரில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் அண்டர்வேர்ல்டு என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒளிபரப்பப் பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர் உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இப் படங்களை, கடந்தவாரம் பெங்களூரில் நடந்த கண்காட்சியில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.
பூம்புகாரில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் அண்டர்வேர்ல்டு என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒளிபரப்பப் பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர் உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இப் படங்களை, கடந்தவாரம் பெங்களூரில் நடந்த கண்காட்சியில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.
சிலப் பதிகாரத்தில் வரும் சாம்பா தேவி கோவிலும் அதன்
காவல் பூதங்களும் இது கோவலன் கண்ணகி வாழ்ந்த பூம்பூகார் நகரின் எல்லை பகுதியில் இருக்கிறது ஆனால் யாருடைய கவனிப்பும் இல்லாமல் முட்புதரில் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வரும் ஓரே கோவில் தமிழ் நாட்டில்இது மட்டும் தான். நம் மக்களின் அறியாமையினால்தான் தமிழனின் வீரமும் வரலாறும் மறைக்கபடுகிறது, அழிக்கப்படுகிறது எது எதற்க்கோ சங்கமும் கட்சியும் நடத்தும் நாம் இது போன்ற வரலாற்றை காப்பற்ற ஒரு அமைப்பு நடத்துவோம் அப்போது தான் தமிழன் உலகளவில் தலை நிமிர்வான்...!
காவல் பூதங்களும் இது கோவலன் கண்ணகி வாழ்ந்த பூம்பூகார் நகரின் எல்லை பகுதியில் இருக்கிறது ஆனால் யாருடைய கவனிப்பும் இல்லாமல் முட்புதரில் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வரும் ஓரே கோவில் தமிழ் நாட்டில்இது மட்டும் தான். நம் மக்களின் அறியாமையினால்தான் தமிழனின் வீரமும் வரலாறும் மறைக்கபடுகிறது, அழிக்கப்படுகிறது எது எதற்க்கோ சங்கமும் கட்சியும் நடத்தும் நாம் இது போன்ற வரலாற்றை காப்பற்ற ஒரு அமைப்பு நடத்துவோம் அப்போது தான் தமிழன் உலகளவில் தலை நிமிர்வான்...!
மேலும் காவிரிப்பூம்பட்டினத்தின் பழமையை அறிய கீழ்காணும் இணைய தளங்களுக்கு செல்லவும்.
http://tamilsproud.blogspot.in/
http://aarkaytamil.blogspot.in/2014/02/blog-post_9.html
http://www.eegarai.net/t85999-topic
http://esp-fenix.blogspot.in/2012/06/blog-post_24.html
http://ivalbharathi.blogspot.in/2012/07/11500.html
No comments:
Post a Comment