வீரக்கலைகளின் தந்தை போதிதர்மா...!
இன்று உலகெங்கும் கராத்தே, குங்பூ, ஜூடோ, நின்ஜாக், போன்றவைகள் தற்பாதுகாப்புக் கலைகளாக பயிற்றுவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், உலகெங்கும் புத்தமதம் ஒரு உன்னதமான மதமாக போதிக்கப்பட்டு வருகிறது. இவை இரண்டிற்குமே மூலகாரணமாக இருந்த மாவீரன் போதிதருமர் ஒரு தமிழனே என்பதை வரலாறு தெளிவாக சொல்கிறது.
சீனாவில் ஷவோலின் கோவிலுக்கு போகும் பாதையில் வைக்கப்பட்டுள்ள போதிதர்மரின் சிலை. |
ஆம்.வீரத்தையும், விவேகத்தையும் உலகிற்கே
கற்றுக்கொடுத்த உலகின் மிகப்பெரிய தமிழ் ஆசான்: போதி தருமர்.
போதிப்பதையே தமது வாழ்வின் தர்மமாக
கருதிய இவர் தமது பெயரை போதிதருமன் என்று மாற்றிக்கொண்டது பொருத்தமானதே!
ஆம்.வீரத்தையும், விவேகத்தையும் உலகிற்கே
கற்றுக்கொடுத்த உலகின் மிகப்பெரிய தமிழ் ஆசான்: போதி தருமர்.
போதிப்பதையே தமது வாழ்வின் தர்மமாக
கருதிய இவர் தமது பெயரை போதிதருமன் என்று மாற்றிக்கொண்டது பொருத்தமானதே!
இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்ட பல்லவ சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட கந்தவர்மன் என்ற மன்னருக்கு மூன்றாம் மகனாகப் பிறந்தவர். இவர் அரசனாக பட்டம்சூடிய பிறகே, பல்லவ அரசராக சிலகாலம் இருந்து, பிறகு புத்த மதத்தைத் தழுவியவதால் புத்தமதத்தை தழுவி தனியேறாகத் தன் நாட்டை விட்டு சென்றவர். புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா
அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே
உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.
(பொய்யை சொன்னாலும் பொருத்தமாக சொல்லவேண்டும்.
வீரம் என்றால் என்னவென்றே அறியாதவர்களையெல்லாம் மாவீரர்களாக சித்தரிக்கின்ற போலி
வரலாற்று ஆசிரியர்கள் போதி தர்மரைபற்றி எழுதும்போது இவரை ஒரு தமிழன் என்று கூட
குறிப்பிடாமல் தென்இந்தியன் என்று மட்டும் குறிப்பிடுவது அவர்களுடைய கயமை குணத்தை
நிரூபிக்கிறது. சிலர், இவரை தென் இந்தியாவிலிருந்து சென்ற
பிராமண துறவி என்று கூட எழுதிவைத்துள்ளார்கள்.)
பார்வைக்கு: http://en.wikipedia.org/wiki/Bodhidharma/Birthplace_sources#cite_note-FOOTNOTEMcRae200326-4
)
இவர் கற்பித்த கலைகளின் நூல்களை ஆய்வுசெய்து பார்த்தால், நமது சித்தர்கள் கற்பித்த போர்க்கலைகளின் முன்வடிவு பயன்படுத்தப்பட்டிருப்பதை காணமுடியும். மன்னர் வம்சத்தில் பிறந்தவர்களுக்கு அவைகள் காலம் காலமாக பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. (இதுவே, அகத்தியர் முதலான வர்மக்கலையை தோற்றுவித்த சித்தர்கள் அதற்கும் முற்ப்பட்ட காலத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கும் ஆதாரமாகும்.)
போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையைஇவர் கற்பித்த கலைகளின் நூல்களை ஆய்வுசெய்து பார்த்தால், நமது சித்தர்கள் கற்பித்த போர்க்கலைகளின் முன்வடிவு பயன்படுத்தப்பட்டிருப்பதை காணமுடியும். மன்னர் வம்சத்தில் பிறந்தவர்களுக்கு அவைகள் காலம் காலமாக பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. (இதுவே, அகத்தியர் முதலான வர்மக்கலையை தோற்றுவித்த சித்தர்கள் அதற்கும் முற்ப்பட்ட காலத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கும் ஆதாரமாகும்.)
அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.
போதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம்
இன்றைய கட்டத்தில் போதிதர்மரைப்பற்றி அறிந்துகொள்ள தமிழ் உலகு பெரும் விருப்பம் கொண்டுள்ளது இதில் தமிழ் நாட்டில் வர்மம் சாஸ்திரம் எனப்படும் மருத்துவ போர்க்கலையின் சீன வடிவம், அதாவது போதிதர்மர் சீன தேசத்தில் கற்பித்த வர்ம சாஸ்திரம்
"DIM MAK - டிம் மாக்" என்பதுவே சீன மொழியில் வர்ம சாஸ்திரத்தின் பெயராகும், இதன் அர்த்தம் "மரண அடி" என்பதாகும். புருஸ் லீயின் மரணம் கூட இளக்காமல் விட்ட வர்மத்தினால் ஏற்பட்ட மரணம் என்று கூட ஒரு கருத்து உண்டு.
வர்மத்தின் தத்துவம் என்ன?
சீன தத்துவத்தின் படி வர்மத்தின் அடிப்படை சீ (chi or ki) எனப்படுவது பிராண சக்தி. இந்த பிராண சக்தியானது உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நரம்பு மண்டலங்களினூடாக உடல் முழுவதும் பரவி உடலை வலுவூட்டுகின்றது. இவை மெரிடியன்கள் என அழைக்கப்படும். சீன மருத்துவ கொள்கையின் படி (நமது சித்த வைத்திய, தாந்திர யோக கொள்கையின் படியும்) நோய் என்பது இந்த பிராண ஓட்டத்தில் ஏற்படும் தடையாகும். இதனை சீர்செய்வதற்கு பாவிக்கப்படும் உத்திகளே அக்குபிரசர், அக்குபஞ்சர் போன்றவை. இவை இந்த அடிப்படையின் நல்வடிவங்கள்! டிம் மாக் அல்லது மரண அடி இதன் தீய வடிவமாகும்.
நவீன விஞ்ஞானத்தின்படி இந்தப்புள்ளிகள் நரம்புகளில் இணைப்பு (junction points) பகுதியாகும், அத்துடன் நரம்பியல் ரீதியாக அவை உடலின் உள் அங்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை சேதமுறும் போது அவற்றின் விளைவுகள் நேரடியாக அவைகளின் மூலமாக செயல்படும் அங்கங்களை பாதிக்கச் செய்து மரணத்தை ஏற்படுத்துகிறது.
பாதிப்பை ஏற்படுத்துவதற்கு குறித்த இடத்தில் ஏற்படும் அடியின் வேகத்தின் அளவு முக்கியமானதாகும், இதனை தமிழ் வர்மசாஸ்திரத்தில் மாத்திரை அளவு என்பார்கள், மாத்திரை அளவு அதிகமானால் வர்மம் மிகவும் ஆபத்தானது. மருத்துவத்தால் குணப்படுத்த முடியாமலும் போகலாம்.
இந்த முறை சீன போர்க்கலையில் இறுதி நிலையில் கற்றுக்கொடுக்கப்படும் ஒரு போர்முறையாகும். இனி இவற்றின் பிரிவுகளைப்பார்ப்போம்.
இந்த பகுப்பு தாக்குதலினையும், பாதிப்பு ஏற்படும் விதத்தினையும் கொண்டு பகுக்கப்பட்டுள்ள ஒருமுறையாகும். இதன் படி சீன வர்மம் மூன்று வகையான தாக்குதல் முறையினைக் கொண்டுள்ளது.
1. Tien Ching - நரம்பு முனைகளை தாக்குதல்
2. Tien Hsueh - இரத்த நாளங்களைத் தாக்குதல்
3. Tien Hsing Chi - Chi எனப்படும் பிராண சக்தி மையங்களைத் தாக்குதல்.
Tien Ching: நரம்பு முனைகளை தாக்குதல்
இது நரம்பு முனைகளை தாக்கி ஒருவரை பக்கவாதம் அல்லது முடமாக்கும் முறையாகும். இவை குறித்த புள்ளிகளை இலக்கு வைத்துதாக்காமல் தனது வலிமையினை கொண்டு எதிராளியின் உடலில் நரம்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.
Tien Hsueh - இரத்த நாளங்களைத் தாக்குதல்
நாடிகளையும் நாளங்களையும் தாக்கி இரத்த அடைப்பை ஏற்படுத்தும் முறையால பாதிப்பை ஏற்படுத்துவதாகும். இந்த தாக்குதல் எதிராளிக்கு பின்வரும் காரணங்களால் மரணத்தை ஏற்படுத்தகூடும்.
1. மூளை, இதயம் போன்ற அங்கங்களுக்கு இரத்தம் செல்வது தடைபட்டு மரணம் சம்பவிக்கலாம்.
2. அடிபடும் போது ஏற்படும் இரத்த உறைதல் இரத்த நாளங்களினூடு சென்று மாரடைப்பு, மற்றும் மூளையில் அடைப்பினை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்ப்படுத்தலாம்.
3. சில உறுப்புகள் உடனடியாக சேதமடைவதால் இரத்த உறைதல் ஏற்பட்டு சம்பவிக்கும் மரணம்.
Tien Hsing Chi - பிராண சக்தி மையங்களைத் தாக்குதல்.
இது Chi எனப்படும் பிராண சக்தி மையங்களைத் தாக்குதல். இதன் விளைவு மரணம் உடனடியாகவும் சம்பவிக்கலாம், அல்லது நீண்டகாலத்திற்கு பின் சம்பவிக்கலாம். இது மனித உடலில் பிராணனின் ஒட்டத்தினை தடை செய்யும் முறையாகும். இதற்கு தாக்குபவரிற்கு பிராணன் வசப்பட்டிருக்க வேண்டும்.
சீன வர்மக்கலையின் படி உடலில் மரணத்தினை ஏற்படுத்தக்கூடிய புள்ளிகள் 36 ஆகும். தமிழ் வர்மசாஸ்திரத்தின் படி அவை 108 ஆகும். தமிழ் வர்மக்கலை பற்றி சித்தர்கள் எழுதியவற்றை மீண்டும் மற்றொரு கட்டுரையில் காண்போம்
No comments:
Post a Comment