கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே....என்பதன் விளக்கம்?
இது தான் பாடல்…
“பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர்-கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்தகுடி”.
– புறப்பொருள் வெண்பா மாலை எனும் இலக்கண
நூலில் எழுதப்பட்ட பாடல் இது. எழுதியவர்
ஐயனாரிதனார்.
பாடலின் பொருள் : பூமி தோன்றிய பின் நீர் விலகி நிலம் தெரிந்த போது முதலில் தெரிந்தது மலைகள்(குறிஞ்சி நிலம்) தான். அத்தகைய மலைகளில் தோன்றிய மனிதர்கள், தங்கள் ஆயுதங்களாக கற்களைப் பயன்படுத்தினர் ( கையகலக் கல்) அதன் பிறகு, விளை பொருட்களை உருவாக்கும் நிலங்களை (மருத நிலம் - மண்) கண்டுணரும் முன்னரே, உலோகத்தால் ஆன வாளோடு திரிந்தவர்கள் தான் தமிழர்கள்.
உலோகப் பயன்பாட்டினைக் கண்டுபிடித்த அறிவாளி என்ற பொருளிலே தான் சொல்லியிருக்கிறார்.
கல் தோன்றி அது மண்ணாக மாற்றமடையும் முன்னரே
தமிழன் தோன்றி விட்டான் என்ற பொருளில் திரித்து விடும் தமிழ்க் கயவர்கள்
இருக்கும் வரை பழம் பெருமை பேசியே வீணாப் போக வேண்டியது தான் நாம். மற்ற
இனத்தவர்களுக்கு முன்னமே உலோகம் கண்டு பிடிக்கும் அளவுக்கு இருந்த
தமிழினம் இன்று வெட்டிப் பெருமை பேசுவதிலேயே காலத்தைக்
கழித்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் தப்புத் தப்பாக.
பெரிய கொடுமை என்னவென்றால், நோவா காலத்து
கடற்கோளினால் உலகம் அழிந்து பின் கடல் நீர் வற்றும் போது மலைகள் தான்
முதலில் தெரிந்தன இன்னும் வடிந்து மண்
தெரிவதற்கு முன்னமே வாளோடு தமிழன் திரிந்ததாக இன்றைக்கும் பெரிய கவியாகப் போற்றப்படும் ஒரு பெரியவர் எழுதியிருக்கிறார்.
No comments:
Post a Comment