தமிழரின் மரபணு மிகவும் பழமையானது !
உலகில் தோன்றிய முதல் குடிமக்கள் என்ற பெருமையை தமிழ் நாட்டில், மதுரையை அடுத்த கிராமமாகிய ஜோதிமாணிக்கத்தில் பதினைந்து பேர்களுக்கு கிடைத்திருக்கின்றது. அதில் முதலாவதாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் திரு.விருமாண்டி என்னும் தமிழர் . மேலும் ஆய்வு செய்தபோது, அதே ஜோதிமாணிக்கம் கிராமத்தில் மேலும் பதினான்கு பேர் அத்தகைய DNA வுடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இன்னும் ஆய்வுக்குட்படாத ஏராளமான தமிழர்களிடத்தில் இத்தகைய DNA இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. கடல்கொண்ட மதுரையிலிருந்து இவர்கள் குடிபெயர்ந்து வந்ததால் இந்த இடத்திற்கும் மதுரை என்று பெயர் வந்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். திரு. ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை கண்டறிந்து உள்ளார். இவர்களுடைய மரபணுக்கள் 60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூர்வகுடிகளுடைய மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர்.
திரு.ஆ.விருமாண்டி தேவர். |
இப்போதைக்கு இந்தியாவில் இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. “THE STORY OF INDIA” என்ற தலைப்பில் “Michael Wood ” என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று விருமாண்டியிடம் விஞ்ஞானிகள் கேட்டபோது, "இந்த உலகில் வாழும் எல்லாருக்கும் ஒரே அப்பாதான் இருக்கமுடியும். நிறமும் மொழியும்தான் மாறுபடும்" என்று கூறினார். (சரியாக சொன்னீர்கள், என்ன இருந்தாலும் அந்த ஒரு உலக தந்தையினுடைய DNA உங்களிடத்தில் அல்லவா இருக்கிறது?)
மேலும் பல விஞ்ஞானிகள் இவரை ஆய்வுக்கு அழைத்தபோது, தான் ஒரு அந்நியமான மனிதனாக காணப்படுவதை விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.
வில்லியம் ஸ்காட் எலியாட் என்பவர் வரைந்துள்ள இலெமுரியாவின் வரைபடத்தை ஆய்வு செய்யாமல் ஆய்வாளர்கள் "மனித இனம் ஆதியில் எங்கே இருந்து எங்கே இடம் பெயர்ந்து சென்றது" என்று ஆய்வது அறியாமையிலும் அறியாமையே ஆகும். (எந்த காலத்தில் இடம்பெயர்ந்ததாக கூறுகிறார்களோ அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த உலகவரைபடத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.)
உலகின் மிகவும் பழங்குடி மக்களுக்குரிய DNA வை உடைய மக்களின் இருப்பிடங்கள் அனைத்தும் இந்த இலேமுரியாவின் வரைபடத்தின் எல்லைகளின் ஒரு பகுதியாக இருப்பதை ஆய்வாளர்கள் கவனிக்கவேண்டும். மேலும், இதில் ஆப்பிரிக்காவை சார்ந்த பகுதிகள், ஆஸ்திரேலியாவை சார்ந்த பகுதிகள் காடுகள் நிறைந்த பிரதேசமாக இருப்பதையும், அப்படி இருப்பதற்கான தட்ப வெப்ப நிலையினையே பெற்று இருப்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இலெமுரியாவின் மையப்பகுதியாக இருந்த இந்தியாவை ஒட்டிய தமிழர் பகுதிகளே உயரினம் உற்பத்தியாவதற்கு உரிய தட்பவெப்ப நிலையை கொண்டுள்ளதை ஆய்வில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், பிற வரலாற்று ஆதாரங்களையும், தமிழர் நூல்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது உலகில் 'ஜலபிரளயம்' (பைபிளில் கூறப்படுகின்ற உலகப்பேரழிவு) வருவதற்கு முன்னதாகவே இங்கு நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்துள்ளனர். (பைபிளில் "வெறும் கட்டுக்கதைகள் -பரிசுத்த ஆவியினால் உரைக்கப்பட்டவை அல்ல"- என்று நீக்கப்பட்ட பகுதிகளிலும் கூட இந்த இலெமுரியா கண்டத்தை பற்றிய வரலாறு இருக்கும் என்று கருதி சமீபகால ஆய்வாளர்கள் அவற்றை தேடிக்கண்டுபிடித்து ஆய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.)
உலகிற்கே மூதாதையர்களாக இருந்த தமிழர்களைப்பற்றி உலகறியச் செய்வதன் மூலமாக மனித இனத்தின் வரலாறு இனிமேலாவது வெளிச்சத்திற்கு வரும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை!
No comments:
Post a Comment