உயில் எழுதி வைக்கும்போது பிறக்காத ஒரு குழந்தைக்கு, சொத்தை ஒருவர் கொடுக்க முடியுமா?
பிறக்காத குழந்தைக்குச் சொத்து (Unborn child)
. மேலும், உயிருள்ள நபர் என்பது, மனிதர்களையும், மனிதர்களால் நடத்தப்படும் நிறுவனங்களையும், (அது பதிவு செய்யப் பட்டிருந்தாலும், அல்லது பதிவு செய்யப்படாமல் இருந்தாலும்) உள்ளடக்கியே உயிருள்ள நபர் என்றே கருதப்படும் எனவும் விளக்குகிறது.
இவ்வாறு தெளிவாக சொல்லிப்பட்டிருக்கையில், எப்படி பிறக்காத (உயிரில்லாத) ஒரு குழந்தைக்கு கொடுக்க முடியும் என்ற கேள்வி எழும்.
இந்திய சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு என்றே, 2-ம் அத்தியாயம் உள்ளது. அதிலுள்ள பிரிவுகள் 5 முதல் 53-ஏ வரை உள்ளவைகள், விதிவிலக்கான அல்லது வித்தியாசமான சில சொத்து மாற்றங்களைக் குறிப்பிடுகிறது. அவ்வாறு சொல்லப் பட்டுள்ளவைகளில் பிரிவு 13-ல் தான், “பிறக்காத குழந்தைக்கு சொத்தை மாற்றுவதைப் பற்றி” சொல்லப்பட்டுள்ளது.
பிரிவு:13: “பிறக்காத குழந்தைக்கு, அந்த குழந்தைக்கு பயன் அளிக்கும் வகையில் ஒரு சொத்தை கொடுக்கலாம் என்றும்; அவ்வாறு கொடுத்த சொத்தை பெறுவதற்கு அந்த குழந்தை இந்த உலகில் இல்லாமல் இருப்பதால், அதற்கு முன், அதை உயிருள்ள ஒருவர், தன்கைவசம் வைத்திருத்து, அந்த குழந்தை பிறந்தவுடன் அதனிடம் சேர்த்து விடவேண்டும்” என்று அந்த பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு அந்த பிறக்காத குழந்தைக்கு கொடுக்கும் சொத்தை, அனுபவிக்கும் உரிமையை கட்டுப்படுத்தாமல், (அதன் ஆயுட்கால உரிமை என்று எழுதாமல்) முழுஉரிமையுடன் அந்த குழந்தை பிறந்தவுடன் அனுபவிக்க ஏதுவாக கொடுத்திருக்க வேண்டும்.
மேலும், “பிறக்காத குழந்தை” என்பது இதுவரை பிறக்காமல் அதாவது கருவில்கூட உருவாகாமல் இருக்கும் குழந்தை என்றே சட்டம் கருதுகிறது. ஆனால், கருவில் வளரும் குழந்தை, இந்த உலகில் ‘உயிருடன் இருக்கும் குழந்தை’ என்றே கருத வேண்டும்.
உயில் எழுதி வைக்கும்போதும், இவ்வாறான பிறக்காத குழந்தைக்கு சொத்து சேரும்படியும் உயிலை எழுதி வைக்கலாம்.

No comments:
Post a Comment