Monday 26 January 2015

தேனீக்களால் இவ்வளவு நன்மைகளா?

தேனீக்களால் இவ்வளவு நன்மைகளா? உங்களுக்கு தெரியுமா

இயற்கையின் அருட்கொடைகளில், எளிதில் கெட்டுப் போகாத அற்புதமான பொருட்களில் ஒன்று தான் தேன்.

இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன, சுவாசக் கோளாறு, தீப்புண், விக்கல் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.

இதுமட்டுமின்றி தேனை நமக்கு வாரி வழங்கும் தேனீயின் பங்கு அளப்பரியது என்று சொல்லலாம்.

இதன் மகரந்தமும் இயற்கை மருத்துவத்தில் சிறந்த பங்கை அளிக்கிறது.

* தேனீயினால் சேகரிக்கப்படும் மகரந்தபொடியில் சுமார் 40 சதவீதம் புரதங்கள் கிடைக்கிறது.

* அதனோடு சேர்ந்து அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், பி காம்ளக்ஸ், உள்ளிட்ட பல ஃபோலிக் அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.

* இதில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், பி வைட்டமின்கள், உடல் உறுதியை அதிகரிக்கச் செய்வதுடன் சோர்வை விரட்டியடித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

* தோலில் ஏற்படக்கூடிய அழற்சி, தோல் தடிப்பு அல்லது படை, தோல் எரிச்சல் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

* இதில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன, இவைகள் நுரையீரல் திசுக்களின் மூலமாக உருவாகும் ஆஸ்துமாவிலிருந்து பாதுகாக்கும் ஆற்றலை கொண்டது.

* இதில் என்சைம்கள் இருப்பதால் செரிமானத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.

* பல ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ள மகரந்த துகள்களை காய்கறி அல்லது பழ சாலட்கள் மீது தூவியோ, கேப்சூலாகவோ எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...