ஒருவரின் பெயரை குறிப்பிட்டு இருப்பதாலேயே அவர் தான் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தார் என்று குற்றம் சாட்டிவிடக் கூடாது”
தற்கொலை செய்து கொள்பவர்கள் எழுதிய கடைசி கடிதத்தில்,தற்கொலைக்கு காரணமாக ஒருவரின் பெயரை குறிப்பிட்டு இருப்பதாலேயே அவர் தான் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தார் என்று குற்றம் சாட்டிவிடக் கூடாது” என்று ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி பவித்ரா 9–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 31–ந் தேதி பவித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அவர் ஒரு கடிதத்தை எழுதினார்.அதில், ‘‘என்னை மணி காதலித்தார். ஆனால் நான் அவனை காதலிக்கவில்லை. இது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் தெரியும். இதனால் எனக்கு படிக்க முடியவில்லை. எனது அம்மாவுக்கு அவமானம் வந்துவிட வேண்டாம் என்று இந்த முடிவை எடுக்கிறேன்.
படிக்கும்போது யாரையும் பெண்கள் காதலிக்க கூடாது என்பதற்கு எனது சாவு ஒரு உதாரணம். மணியை விட்டுவிடாதீங்க’’ என்று எழுதி இருந்தார்.அதைத் தொடர்ந்து, தற்கொலைக்கு தூண்டியதாக மணி மீது கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஹைகோர்ட்டில் மணி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் வழங்கிய தீர்ப்பில்,”சுகுமார் என்பவர் தற்கொலை செய்த வழக்கில் ஹைகோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தது. அதில், வேலை வாங்கித் தருவதாக சுகுமார் பலரிடம் பணம் பெற்றிருந்தார். வேலை வாங்கித் தராததால் அவரை பணம் கொடுத்தவர்கள் நெருக்கினர். இதனால் சுகுமார் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டார்.
ஒருவர் தற்கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் யாராவது செயல்பட்டு இருந்தால்தான், அதை தற்கொலைக்கு தூண்டியதாகக் கருத முடியும். மற்றபடி கோழையாக, முட்டாள்தனமாக, பலவீனமான மனநிலையில் யாராவது தற்கொலை செய்துகொண்டால் அதற்கு மற்றவர்தான் பொறுப்பு என்று கூறிவிட முடியாது.காதல் தோல்வி அடைந்ததால் ஒருவர் தற்கொலை செய்யும்போது காதலரையோ; பரீட்சை சரியாக எழுதவில்லை என்று மாணவர் தற்கொலை செய்யும்போது ஆசிரியரையோ; வழக்கில் தோற்றுவிட்டதால் வழக்குதாரர் தற்கொலை செய்யும்போது அவரது வக்கீலையோ, தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்ட முடியாது. இவர்கள் எடுக்கும் தற்கொலை என்ற முட்டாள்தனமான முடிவுக்கு மற்றவர் பொறுப்பேற்க முடியாது என்று கூறியிருந்தது.தற்கொலை செய்வதற்கு முன்பு, சிலரது பெயரை குறிப்பிட்டு, இவர்கள்தான் என் சாவுக்கு பொறுப்பு என்று கடிதம் எழுதுவது வழக்கமாக உள்ளது.
அப்படி எழுதியதுமே கடிதத்தில் காணப்பட்ட அந்த நபர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டிவிட முடியாது.தற்கொலை கடிதம் நன்றாக ஆய்வு செய்யப்பட்டு, தற்கொலை செய்த சூழ்நிலை சரிவர கணிக்கப்பட்டு, அதன் பிறகே குற்றச்சாட்டு குறித்து முடிவு செய்யப்பட வேண்டும். சாதாரணமாக திட்டியதை, கோபத்தில் ஒரு கடினமான வார்த்தையை கூறியதை தற்கொலைக்கு தூண்டியதாக எடுக்க முடியாது. மனைவியை கணவன் திட்டுவதையெல்லாம், மனைவியின் தற்கொலைக்கான காரணமாக காட்ட முடியாது.இந்த விஷயத்தில் மணி, பவித்ராவை மிகவும் காதலித்திருக்கிறார். தனது காதலுக்காக மணி ஏங்குகிறார் என்று பவித்ராவுக்கு தெரியும். அது ஒருதலைக் காதல் தான். அதனால் அவளால் சரிவர பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த காதல் விஷயம் வெளியில் தெரிந்தால் அம்மாவுக்கு அவமானமாகிவிடும் என்று பயந்து பவித்ரா தற்கொலை செய்திருக்கிறார். எனவே அந்த தற்கொலையில் மணிக்கு என்ன பங்கு இருக்கிறது?பவித்ராவுக்கு ஒரு நிலையான மனது இல்லை. மணியின் காதலால் பவித்ரா வருத்தமடைந்து இருக்கிறார்.
பலவீனமான மனதைக் கொண்ட கோழையாக இருந்திருக்கிறார். தற்கொலை என்பது முட்டாள்தனம் என்று தெரியாத முட்டாளாகவும் இருந்திருக்கிறார். மணிக்கு பவித்ராவைப் பற்றிய கனவுகள் தான் இருந்ததே தவிர, அவளது சாவைப் பற்றி அவர் நினைத்ததே இல்லை.அவள் சாக வேண்டும் என்பது மணியின் விருப்பமும் இல்லை. அவள் சாக வேண்டும் என்ற உள்நோக்கத்தில் மணி செயல்பட்டு, அதனால் பவித்ரா தற்கொலைக்கு தூண்டப்படவில்லை. தற்கொலைக்கு தூண்டும் நேரடி செயல் இல்லாதபோது, மணியை பவித்ராவின் சாவு தொடர்பாக குற்றம்சாட்ட முடியாது.மன அழுத்தத்தாலும், அதிலிருந்து விடுதலை பெற முடியாததாலும் தான் பவித்ரா தற்கொலை செய்துகொண்டார்.
இதை பாடமாக மற்றவர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும். மணி மீது வேறு குற்றப் பின்னணி இல்லை. போதுமான அளவு ஜெயிலில் இருந்துவிட்டார். எனவே மணியை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடுகிறேன்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment