இந்திய ஊழல் தடுப்புச் சட்டம்-1988
1988ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது, இச்சட்டத்தின்படி லஞ்சத்தின் வரையறை:
லஞ்ச ஊழலை சட்டத்தின்படி தவறு இழைத்த ஒரு நபருக்குத் குறைந்த பட்சம் ஆறு மாதம் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம்விதிக்கப்படலாம்.
ஊழல் குறித்து புகார் செய்யும் விதம்
ஊழல் குறித்து புகார் செய்யும் போது புகார்தாரர் தனது பெயரையும்,முகவரியையும் தெளிவாகக் கூற வேண்டும். மத்திய அரசுத் துறை என்றால் மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கும், மாநில அரசுத் துறை என்றால் ஊழல் தடுப்பு இயக்குநருக்கும் புகார் செய்யலாம். ஒரு பொது ஊழியர் குறித்துப் பொய்யான புகார் தருவது இந்திய தண்டனைச் சட்டம்- பிரிவு 182 -இன் படிதண்டனைக்குரியது. பெயரில்லாத புகார்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஊழலில் சிக்கிய அதிகாரிகள் குறித்த தகவல்களை மத்திய விழிப்புணர்வு ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் தனித்தொகுப்பாக வெளியிட்டு வருகிறது.http://cvc.nic.in என்ற இணைய தளத்தில் (CENTRAL VIGILANCE COMMISSION) இது குறித்த முழுமையான விவரங்கள் உள்ளன.
- பொது ஊழியர் தன்னால் செய்யப்பட வேண்டிய அதிகாரப் பூர்வமான வேலைக்கு சட்டப்படி பெற வேண்டிய ஊதியத்தை தவிர கைகூலி பெறுவது.
- பொது ஊழியம் செய்பவர் மறுபயன் இல்லாமல் விலை மதிப்புள்ள பொருட்களை தன்னுடைய அலுவல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஒருவரிடம் வாங்குவது.
- அதில் சம்பந்தப்பட்டவர் பொது ஊழியராக இருத்தல் வேண்டும்.
- அவர் செய்யும் வேலை அதிகாரப் பூர்வமாக இருக்க வேண்டும்.
- பொது ஊழியர் தான் செய்ய வேண்டிய வேலையை செய்வதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்க்கோ சட்டத்திற்குப் புறம்பாக பணம் கோருதல் அல்லது பெறுதல்.
- பொது ஊழியரின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகித்துப் பண மதிப்புள்ள அனுகூலம் பெறத் தகாத சலுகை அளித்தல்.
- ஒரு குடிமகனிடமிருந்து பொது ஊழியர் அதிகாரப் பூர்வமான கடமையைச் செய்வதற்காக மறுபயனின்றி விலை மதிப்புள்ள பொருளைப் பெறுவதும் லஞ்சமே.
- அந்த பொது ஊழியர் நேரடியாகவோ அல்லது முகவர் மூலமாகவோ லஞ்சம் பெற்றால் அவரும் அவருக்கு லஞ்சம் வழங்குபவர்களும் குற்றவாளிகள்.
- பொது ஊழியர் தனது வருமான வழிவகைகளுக்குப் பொருந்தாத விதத்தில் சொத்துக்களைக் சேர்த்தலும் சட்டத்தின் படி குற்றம் என வரையறுக்கப் பட்டிருக்கிறது.
லஞ்ச ஊழலை சட்டத்தின்படி தவறு இழைத்த ஒரு நபருக்குத் குறைந்த பட்சம் ஆறு மாதம் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம்விதிக்கப்படலாம்.
ஊழல் குறித்து புகார் செய்யும் விதம்
ஊழல் குறித்து புகார் செய்யும் போது புகார்தாரர் தனது பெயரையும்,முகவரியையும் தெளிவாகக் கூற வேண்டும். மத்திய அரசுத் துறை என்றால் மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கும், மாநில அரசுத் துறை என்றால் ஊழல் தடுப்பு இயக்குநருக்கும் புகார் செய்யலாம். ஒரு பொது ஊழியர் குறித்துப் பொய்யான புகார் தருவது இந்திய தண்டனைச் சட்டம்- பிரிவு 182 -இன் படிதண்டனைக்குரியது. பெயரில்லாத புகார்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஊழலில் சிக்கிய அதிகாரிகள் குறித்த தகவல்களை மத்திய விழிப்புணர்வு ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் தனித்தொகுப்பாக வெளியிட்டு வருகிறது.http://cvc.nic.in என்ற இணைய தளத்தில் (CENTRAL VIGILANCE COMMISSION) இது குறித்த முழுமையான விவரங்கள் உள்ளன.
No comments:
Post a Comment