Saturday, 17 January 2015

வலுவான எலும்புக்கு வழி!

இளமை நம்மைக் கடந்து செல்வதும், முதுமை நம் வாழ்க்கையை அணுகும்போதும் உடலில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் கால்சியம் சத்தும் குறைவதால் எலும்புகள் தனது உறுதித்தன்மையை இழந்து விடுகின்றன. எலும்புகள் உறுதித் தன்மையை இழப்பதை நம்மால் உணர முடியாது. மெதுவாக தேயத் தொடங்கும் எலும்புகளால் பிற்காலத்தில் பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். நம் எலும்பை உறுதியாக வைத்துக் கொள்ள சில வழிகள் உங்களுக்காக‌... 

* நடப்பதால் உடல் அசதி, வலி வந்துவிடும் என்று நடைக்கு சிலர் தடை போடுவார்கள். இது தவறு. தினசரி குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
 
* நம் காலுக்கேற்ற சரியான அளவுள்ள காலணிகள் அணிவதன் மூலம் முழங்கால் வலி, வாதம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
 
* மிகவும் வயதானோர் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.
 
* தினசரி குறைந்தது 15 நிமிடமாவது அதிகாலை சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக் கொள்வது நல்லது.
 
* கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, பச்சைக் காய்கறிகள், தானியங்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
* காபி அதிகம் குடிப்பதை தவிருங்கள். இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.
 
* இரவில் பால் அருந்துவதைவிட காலை மாலை வேளைகளில் அருந்துவது சிறந்தது.
 
* மீன் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
 
* புகை, மது பழக்கம் உடலில் உள்ள கால்சியத்தின் அளவைக் குறைத்துவிடும். அவற்றை விட்டுவிடுதல் நல்லது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...