பெண்களுக்கான விவாகரத்து சட்டங்கள் ஒரு பார்வை....
விவாகரத்து கோர ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான உரிமை உண்டு. இருப்பினும், சில அடிப்படைக் காரணங்கள் பெண்கள் மட்டுமே விவாகரத்து கோர வரையறுக்கப்பட்டுள்ளது. கணவன் கற்பழிப்பு, இயற்கைக்கு மீறிய தவறான உறவு மேற்கொள்ளுதல் (ஆண் ஆணுடனோ, மிருகத்துடனோ உடலுறவு வைத்துக்கொள்ளுதல்).
ஒரு திருமணம் சட்டப்படி நிலுவையில் இருக்கும் பொழுதே மறுமணம் செய்து கொள்ளுதல். இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். ஜீவனாம்சம் பெற்றுக்கொண்டு இருந்தும் கணவன் திருமண உறவில் ஈடுபடாமல் அதற்கான கடமை ஆற்றாமல் இருக்கும் போது... இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.
ஒரு பெண் 15 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டால் அவள் 18 வயதுக்கு முன் அதனை ரத்து செய்ய கோருதல்... இந்து திருமணச் சட்டம் மற்றும் 1939ம் ஆண்டு இயற்றப்பட்ட இஸ்லாமிய திருமணங்கள் ரத்து சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.
ஒரு சில நேரங்களில் தங்களுடைய திருமண உறவு தொடர்வதனால் எந்தப் பயனுமே இல்லை என்று நினைக்கும் தம்பதி, ஒருமனப்பட்டு விவாகரத்து மனு தாக்கல் செய்யவும் இந்து திருமணச் சட்டம், கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்துச் சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் ஆகிய அனைத்துச் சட்டங்களின் கீழும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் கீழ் கணவர், மனைவி இருவரும் விவாகரத்துக்கு முழுமனதுடன் சம்மதித்து அவர்களுடைய ஜீவனாம்சம், எதிர்கால வாழ்வாதாரம், குழந்தை இருப்பின் அவற்றின் காப்பாளர் உரிமை, அவரவர் சொத்தின் மேலுள்ள உரிமை ஆகியவற்றை முடிவு செய்து, ஒரு தீர்வு கண்ட பின், இந்த மனமொத்த விவாகரத்து மனு தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து இறுதி விசாரணைக்கு 6 மாத கால அவகாசம் அளிக்க அனைத்துச் சட்டங்களும் வகை செய்துள்ளது. இந்தக் கால அவகாசம் கொடுப்பதற்கான அடிப்படைக் காரணம் - தம்பதி தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமையை மறந்து ஒன்றுகூட இந்த கால அவகாசம் உதவலாம் என்ற எண்ணமே.
இந்த மனமொத்த விவாகரத்து மனு தாக்கல் செய்த தினத்திலிருந்து 18 மாதங்கள் மட்டுமே நிலுவையில் இருக்கும். அதற்குள் விவாகரத்து பெறாவிடில் தள்ளுபடி செய்யப்படலாம். அது போல 6 மாத கால அவகாசம் முடிந்து வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது இருவரில் யாரேனும் ஒருவர் விவாகரத்துக்குச் சம்மதிக்காத பட்சத்திலும் வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம்.
திருமணம் மட்டுமல்ல மணவிலக்கும்கூட நீண்ட, நெடிய வழிமுறைகளைக் கொண்டதுதான். தற்போதைய விவாகரத்துச் சட்டத்தின்படி, பிரிந்து வாழவேண்டும் என்று ஒரு கணவனும் மனைவியும் முடிவு செய்துவிட்டால் விண்ணப்பித்தபிறகு குறைந்தபட்சம் 6 முதல் 18 மாதங்கள் வரை விவாகரத்துக்காகக் காத்திருக்கவேண்டும்.
இனி அந்த நிலை இல்லை. பிரிந்த தம்பதிகள் விரைவில் விவாகரத்து பெறும் வகையில் புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. 2010 இந்து திருமணச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, அதற்கு மத்திய அரசு கடந்த மார்ச் 23ம் தேதி ஒப்புதலும் அளித்துவிட்டது. உடனடி விவாகரத்து கோருபவர்களுக்கு வசதியாக, ‘சேர்ந்து வாழ முடியாத திருமணம்’ என்றொரு புதிய விதிமுறையும் ‘சேரவே முடியாது’ என்றொரு விதிமுறையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி கணவன் விவாகரத்து கேட்டால் மனைவி அதை எதிர்க்கலாம். ஆனால் மனைவி கோரும்போது கணவன் எதிர்க்கமுடியாது. மேலும், சொத்து தொடர்பாகவும், குழந்தைகள் பராமரிப்பு தொடர்பாகவும்கூட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய விவாகரத்து சட்டம் எந்த அளவுக்குப் பலனளிக்கக் கூடியது? அறிந்துகொள்ள சில வழக்கறிஞர்களைச் சந்தித்தோம்.
க. தேசிங், வழக்கறிஞர் :
அரசியல் சாசனம் அளிக்கும் சம வுரிமைக்கு எதிராக, பெண்ணுக்கு மட்டும் சில சலுகைகள் தருகிறது புதிய சட்ட திருத்தம். ஆகவே, அடிப்படையே தவறு.
திருமணமான ஒரு ஆண் வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டால் மனைவி விவாகரத்து கேட்கலாம். அதே சமயம், மனைவி இன்னொரு ஆணுடன் உறவு கொண்டால், கணவன் விவாகரத்து கோர இயலாது.
ஒரு ஆண் தனக்கு நேரும் சங்கடங்களை, உடல், மன ரீதியான பாதிப்புகளை தயக்கத்தின் காரணமாக வெளியில் சொல்வதில்லை. 1869ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து மண விலக்குச் சட்டம் ஆண்கள் காலில் பூட்டப்பட்ட விலங்காக உள்ளது. ஆண்களுக்கு எதிராகப் பல விதிகள் ஏற்கெனவே உள்ளபோது, புதிதாக ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது அரசு.விவாகரத்துக்குப் பிறகும் மனைவிக்கு கணவனின் சொத்தில் பங்கு உண்டு என்பது பல சிக்கல்களை உருவாக்கும்.
அனுராதா பாலாஜி, வழக்கறிஞர் :
ஒத்துப் போக முடியாதவர்களைப் பிரியவிடுவதுதான் நல்லது. பல சட்டங்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தி ஒரு பெண் தன் உரிமையை நிலைநாட்ட படாதபாடு பட வேண்டிய நிலையே நீடிக்கிறது.
ஒரு பெண் தன் கணவருக்காக வங்கியில் கடன் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். விவாகரத்துக்குப் பிறகு அந்தக் கடன் சுமை அவள் தலையில்தான் விழுகிறது. இப்படிப்பட்ட பல வழக்குகளை நாம் பார்க்கிறோம். மனைவியின் சம்பாத்தியம் வேண்டும், அவள் மூலம் பல பலன்கள் வேண்டும், அதே சமயம் பிரிந்துவிட்டால் சொத்தில் பங்கு தரமுடியாது என்பது எந்த வகையில் நியாயம்?
இப்படியொரு சட்டம் வந்துவிட்டால் விவாகரத்துகள் பெருகிவிடும் என்று சொல்வது சரியான வாதமல்ல. இப்படியொரு சட்டத்துக்காகத்தான் பெண்கள் பல காலம் போராடிவருகிறார்கள். இதை வரவேற்கவேண்டும்.
யு. வெங்கடேசன், வழக்கறிஞர் :
தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்துதான் அதிக அளவு விவாகரத்து வழக்குகள் வருகின்றன. உதாரணத்துக்கு, ஒன்று. மாதம் 80,000 ரூபாய் சம்பளம் பெறும் ஒருவர் விவாகரத்துக்குப் பிறகு தன் சம்பளத்தின் பெரும் பகுதியை ஜீவனாம்சத்துக்கும் குழந்தை பராமரிப்புக்கும் கொடுத்துவிடுகிறார். இவற்றையும் பெற்றுக்கொண்டு தனி வருமானமும் ஈட்டிவருகிறார் அந்தப் பெண். இது போதாதென்று புதிய சட்டம், விவாகரத்துக்குப் பிறகு மனைவிக்கு சொத்தில் பங்கு தரவேண்டும் என்று வலியுறுத்துகிறது. பங்கு எவ்வளவு என்பதை நீதிமன்றம் உறுதி செய்யுமாம். இது ஒருதலைபட்சமானது இல்லையா? விவாகரத்து சட்டம் தொடர்பாக பொதுக் கருத்து எட்டப்படவேண்டும் என்பது என் நிலைப்பாடு.
திவ்யாதேவி, வழக்கறிஞர் :
இந்தச் சட்டத்தால் ஆண், பெண் இடையே சில முரண்கள் உருவாகியிருக்கின்றன என்றாலும் குழந்தைகள் விஷயத்தில் ஒரு நல்ல அம்சத்தைக் கொண்டிருக்கிறது. தத்து எடுத்த குழந்தையும் சொந்தக் குழந்தையும் சமம் என்பதை புதிய சட்டம் உறுதி செய்துள்ளது. இனி தத்துப் பிள்ளைக்கும் சொத்தில் பங்கு உண்டு என்பது வரவேற்கத்தக்கது.
தமிழரசி பாபு :
விவாகரத்துக்குப் பிறகு இன்னமும் எழுபது சதவிகிதம் பெண்கள் தாய் வீட்டிலும், தனிமைப்படுத்தப்பட்டும் வாடிக்கிடக்கின்றனர். தன்னைப் பராமரித்துக்கொள்ளக்கூட அவர்களுக்கு வழியில்லை. கணவன் வீட்டுக்கு வரும்போது, தன் உறவுகள் அனைத்தையும் விட்டுவிட்டே அவள் வருகிறாள். அவளுடைய படிப்புச் செலவு, திருமணச் செலவு எல்லாம் போக வெறும் சொற்பமான அளவிலேயே தந்தைக்கு கையிருப்பு மிச்சமிருக்கும்.
மனைவி என்ற கட்டம் தாண்டி ஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகு பொருளாதார ரீதியில் பராமரிப்பு இல்லாத நிலையைத் தவிர்க்கவே புதிய சட்டம் வந்திருக்கிறது. இந்தச் சட்டம் ஆண்களுக்கு எதிராகத் திரும்பலாம். தவறான வழக்குகள் பதிவு செய்யப்படலாம். இதைத் தவிர்க்க பரவலாக அனைவருக்கும் பலன் தருமாறு சட்டத்தை எப்படி மாற்றியமைப்பது என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தலாம்.விவாகரத்து பெருகிவருவது பற்றி பலரும் குறிப்பிடுகிறார்கள். பெண்களை ஆண்கள் மதிக்காமல் இருப்பதற்கும் அவர்களுடைய சுயமரியாதைக்கு எதிராக நடப்பதற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே காரணம் என்று நினைக்கிறேன். எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குப் பெண்களைக் கீழ்த்தரமாகக் காண்பிக்கிறது சின்னத்திரை. பெண்கள் மீதான மதிப்பீட்டை ஊடகங்கள் மாற்றிக்கொண்டால் நிலைமை மாறும்.
கஜலஷ்மி ராஜேந்திரன், சென்னை வழக்கறிஞர்கள் சங்க மூத்த நிர்வாகக் குழு உறுப்பினர் மேடம் இந்தச் சட்டம் வந்துவிட்டால் உடனடியாகச் சொத்தைப் பிரித்துக்கொள்ளமுடியுமா என்று படித்த இளம் பெண்களே என்னிடம் கேட்கிறார்கள். இப்படியொரு சட்டம் வந்துள்ளது பெண்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. பொதுவாக நம்மைப் போன்ற மரபுகளைப் பேணும் ஒரு நாட்டுக்கு இதுபோன்ற சட்ட முன் வரைவு தேவையற்றது என்பது என் கருத்து. சட்டம் என்று வந்துவிட்ட பிறகு ஆணையும் பெண்ணையும் பிரித்துப் பார்ப்பது சரியில்லை. ஏற்கெனவே பல வழக்குகள் தேங்கியுள்ள நிலையில், இந்தச் சட்டம் வந்தால் பல ஆயிரக்கணக்கான புது வழக்குகள் தேக்கமடையும். மணவிலக்கு கோரி வழக்கு தொடுத்துள்ள பல பெண்கள் இந்தச் சட்டத்துக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், மனம் திருந்தி மீண்டும் புதிதாக வாழத் துடிக்கும் ஆண்களுக்கு இந்தச் சட்டம் முட்டுக்கட்டை போடும் அல்லவா?
புதிய சட்டத்தால் ஆண்களே பாதிக்கப்படுவார்கள் என்கின்றன அகில இந்திய ஆண்கள் நலச் சங்கம், தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம், இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் போன்ற அமைப்புகள். அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் கீழ்வருமாறு.
‘ஆண்டுக்கு 57,000 ஆண்களும் 30,000 பெண்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர். 12 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2001 2005 காலகட்டத்தில் 12 லட்சம் ஆண்கள் வேலை இழந்துள்ளனர். 98 சதவிகிதம் ஆண்கள் திருமணமான மூன்று ஆண்டுகளுக்குள் பெண்களால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். திருமணமான 80 லட்சம் ஆண்கள் பல்வேறு உண்மை மற்றும் போலியான குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர். இதில் 85 சதவிகிதம் பேர் தேவையற்ற முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 20 சதவிகிதத்தினர் மீதே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.பொதுவாக ஆண்கள் மீது சுமத்தப்படும் புகார்களில் அதிகபட்சமானது பாலியல் நடத்தை தொடர்பானது. இதை பெண்கள்மீது சட்டப்படி சுமத்தமுடியாது. பெண்களுக்கு ஊட்டச் சத்துணவு, மருந்து, சிகிச்சை என்று ஏகப்பட்ட திட்டங்கள் பேறுகால உதவியாக அளிக்கப்படுகிறது. ஆனால், புராஸ்டேட் புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களுக்கு உதவக்கூடிய திட்டம் எதுவுமில்லை.மற்றுமொரு அபாயகரமான போக்கு, பெருகி வரும் விந்து வங்கி. எதிர்காலத்தில், பிள்ளைப் பேற்றுக்காக பொலி காளைகள் போல் சில ஆண்கள் மட்டும் போதும் என்னும் நிலை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

No comments:
Post a Comment