ஒரு தலை பட்சமாக எடுக்கபடுகிற முடிவு
அரசாங்கத்தின் கொள்கை முடிவா?
ஊடகங்கள் விவாதம் நடத்த முன் வருமா?
----------------------------------------------------------------------------------------------இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளு மன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திலோ பாராளு மன்றத்தில் இன்று வரையில் யாரும் விவாதம் நடத்தாமல் பேசாமல் ஒரு தலை பட்சமாக போதை பொருள்கள் விற்பனை போன்ற சில முடிவுகள் எடுக்கபடுகிறது. இந்திய ஜன நாயக சுதந்திரத்துக்கு எதிராக பதவியை துஷ்பிரயோகம் மற்றும் நம்பிக்கை துரோகம் செய்து தவறாக எடுக்கபட்டு விட்ட முடிவு என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கியக் காரணமே போதை பொருள்கள் தான். பெற்ற தகப்பனை நம்பி மகளை விட்டுவிட்டுச் செல்ல முடியவில்லை. பண்டிகை நாட்களில் இத்தனை கோடிக்கு மது வியாபாரம் நடந்ததாக அறிக்கை கொடுக்கும் அரசு, அதன் பின்னணியில் எத்தனை பெண்களின் கண்ணீர் இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. மதுவை ஒழித்தால் அரசுக்கு வருவாய் குறைந்துவிடும் என்கிறார்கள்.
இலவசங்களை நிறுத்தினாலே இந்த இழப்பை ஈடு செய்ய முடியும். மது விற்பனைக்கு தடை விதித்தால் கள்ள சாராயம் விற்பனை என கூறுகிறார்கள்.கள்ள சாராய விற்பனையை கூட கட்டுபடுத்தி ஆட்சி நடத்த தெம்பும் தைரியமும் இல்லாத அரசியல் கட்சியிநீங்கள் ஏன் ஆட்சி நடத்த துடிக்கிரீர்கள் இன்னும் பணத்தை சம்பாதிக்கவா, ஓரு பக்கம் தாலிக்கு தங்கம் கொடுத்தாலும் இன்னோரு பக்கம் குடிகார கணவர்களால் தாலியை இழக்கும் பெண்களின் எண்ணிக்கை டாஸ்மாக் உபயத்தால் கூடிக்கொண்டே போகிறது.
தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சி நடத்ததும் திராவிட அரசியல் கட்சியினர் தொடர்ந்து நடை போராட்டங்களை கண்டு கொள்வதே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது.அடுத்த தலைமுறையாவது நீண்ட காலம் போதை பொருள்கள் பயன்படுத்தால் நலமுடன் வாழ வேண்டும்.போதை பொருள்கள் அவசியத்தை எல்லா மட்டத்திலும் பேச ஆரம்பித்திருக்கும் தருணம் இது.
இந்த நிலையில் பொது நல வழக்கு நீதிமன்றதில் தொடரபட்டால் இந்திய அரசியலமைப்பு சட்டம் அத்தியாயம் 4 ஆனது Directive principles of state policy என்பதன் படி அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என கூறி நீதிமன்றத்தின் நீதியரசர்கள் வழக்கை தள்ளுபடி செய்யலாமா? இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி வானொலியில் போதை பொருள்கள் விற்பனை தடை குறித்து பற்றி பேசியதுடன் நின்று விட்டார்.ஆனால் தமிழக முதல்வர் மக்களை பற்றி கவலைப்படாமல் இது நாள் வரை போதை பொருள்கள் விற்பனை தடை குறித்து பேசாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என தமிழக பொது மக்களால் பரவலாக பேசபடுகிறது.
இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி வானொலியில் போதை பொருள்கள் விற்பனை தடை குறித்து பற்றி பேசியதுடன் நின்று விடாமல் இந்தியாவில் பொருள்கள் விற்பனைக்கு தடை சட்டம் கொண்டு வர பாராளுமன்றத்தில் உடனடியாக பேச வேண்டும்,போதை பொருள்கள் தடை விதிக்க தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றத்திலும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் செய்ய வேண்டும்.
ஒரு தலை பட்சமாக முடிவுகள் எடுக்கபடுவதால் நடைபெற விருக்கும் 2016ம் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு போதை பொருள்கள் விற்பனை தடை குறித்து கட்டாயம் வாக்களிக்க வாய்ப்பு கொடுக்க கோறி பொது நல வழக்கு போட்டடால் வாக்களிக்க வாய்ப்பு கொடுக்க தேர்தல் ஆனையதிற்க்கு நீதிமன்றம் கட்டாயம் உத்தரவு போடும் என பல பொது மக்கள் எதிர் பார்த்து கொண்டு உள்ளனர்.
பொது மக்கள் நலன் கருதி ஊடகங்கள் ஒரு தலை பட்சமாக எடுக்கபடுகிற முடிவு அரசாங்கத்தின் கொள்கை முடிவா? என விவாதம் நடத்துங்கோ முதலில்.இந்தியாவில் பொது மக்கள் நீதிமன்றம் மற்றும் ஊடகங்கள் மீது தான் நம்பிக்கையுடன் உள்ளனர்.
பொது மக்கள் நலன் கருதி ஊடகங்கள் ஒரு தலை பட்சமாக எடுக்கபடுகிற முடிவு அரசாங்கத்தின் கொள்கை முடிவா? என விவாதம் நடத்துங்கோ முதலில்.இந்தியாவில் பொது மக்கள் நீதிமன்றம் மற்றும் ஊடகங்கள் மீது தான் நம்பிக்கையுடன் உள்ளனர்.

No comments:
Post a Comment