குமரியை வெல்ல குமரியை உண்க
சோற்றுக்
கற்றாழையை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர வயாகரா இன்றி
இளைஞர்களின் இல்வாழ்க்கை அளவோடு சிறக்கும். இதைத்தான் சித்தர்கள் தங்களுடைய
பரிபாஷையில் ‘குமரியை வெல்ல குமரியை உண்க’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
மகரி தேரையரின் பாடலில் செப்பிய
“பொல்லா மேகம் கபம் புல் சூலை
குட்டம் ரசம் அல்லார் மந்தம்
பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும் இவை
குமரிக்கு மருண்டு”
“பொல்லா மேகம் கபம் புல் சூலை
குட்டம் ரசம் அல்லார் மந்தம்
பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும் இவை
குமரிக்கு மருண்டு”
வியப்பூட்டும் கற்றாழை ரகசியம்
ஆரோக்கியம்,
அழகு என இரண்டு ஏரியாவிலுமே சொல்லி அடிக்கும் கில்லி என்று கற்றாழையைச்
சொல்லலாம். சாதாரண உடல் சூட்டிலிருந்து புற்றுநோய் வரை அத்தனைக்கும்
நிவாரணமாகும் திறன் கொண்டது கற்றாழை. இதன் அருமையை உணர்ந்த சித்தர்கள்,
நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உறுதுணையாகும் வகையில் காயகல்ப மருந்தாகப்
பயன்படுத்தியிருக்கிறார்கள்.கற்றாழையின் மருத்துவ மற்றும் வரலாற்றுச்
சிறப்புகளைப் பற்றி விளக்குகிறார் சித்த மருத்துவர் வெங்கடேசன்.
உடலை உறுதியாக்கும் கற்றாழை!
உடலை
உறுதியாக்கி நோய்களை அருகில் வரவிடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது கற்றாழை.
இதை உணர்ந்துதான் சித்தர்கள் அதைக் கொண்டு காயகல்ப மருந்தாக செய்து
பயன்படுத்தியிருக்கிறார்கள். நாமும் செய்து பின்பற்றக் கூடிய எளிய முறைதான்
இது.
கற்றாழையின் உட்பகுதியில் உள்ள ஜெல் போன்ற பகுதியான சோற்றை எடுத்து 7 முறை நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அதை சிறுசிறு துண்டுகள் போன்று வெட்டி, அதன்மீது பனங்கற்கண்டு சிறிது தூவிக் கொள்ள வேண்டும். இதை மூன்றிலிருந்து ஐந்து ஸ்பூன் அளவில் பகல் நேரத்தில் மட்டும் ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.
கற்றாழையின் உட்பகுதியில் உள்ள ஜெல் போன்ற பகுதியான சோற்றை எடுத்து 7 முறை நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அதை சிறுசிறு துண்டுகள் போன்று வெட்டி, அதன்மீது பனங்கற்கண்டு சிறிது தூவிக் கொள்ள வேண்டும். இதை மூன்றிலிருந்து ஐந்து ஸ்பூன் அளவில் பகல் நேரத்தில் மட்டும் ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.
உடல் குளிர்ச்சிக்குக் கற்றாழை !
வெப்பம்
மிகுதியால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணியாக கற்றாழை
உள்ளது. உடல் சூட்டைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்
கற்றாழை உதவுகிறது. சர்வரோக நிவாரணிநமது உடல் ஆரோக்கியமாக
செயல்படுவதற்குத் தேவையான 22 அமினோ அமிலங்கள் கற்றாழையில் உள்ளது.
வைட்டமின்கள்
A, B1, B2, B3,B5, B6, B12, C, E, மற்றும் துத்தநாகம், செலினியம்,
கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், குரோமியம், தாமிரம், இரும்பு,
பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இதில் உள்ளன. பெருங்குடலை சுத்தம் செய்து,
மலத்தை வெளியேற்றும் Aloin, Emodin போன்ற Anthraquinones என்கிற
வேதிப்பொருளும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் Amylases, Bradykinases,
Catalases, Phosphokinases போன்ற நொதிகளும், சருமத்தைப் பாதுகாக்கத்
தேவையான Lignins போன்றவையும் உள்ளன.
கற்றாழையில்
உள்ள Salicylic Acid மற்றும் Saponins, Sterols ஆகியவை புண்களை ஆற்றுவதில்
பெரும்பங்கு வகிக்கிறது. இவை அனைத்தும் ஒருமித்த முறையில் செயல்படுவதால்
கற்றாழையை சர்வரோக நிவாரணி என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
புற்றுநோய்க்குத் தீர்வு
ஆரம்பநிலை
புற்றுநோய்களுக்கு கற்றாழை நல்ல தீர்வளிப்பதாக விஞ்ஞானிகள்
அறிவித்துள்ளனர். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Acemannan
இதில் உள்ளது. இதை பயன்படுத்தி தற்போது எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய்களுக்கான
மருந்துகள் தயாரித்து அமெரிக்க நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருகிறது.
ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; அழகுக்கும்!
பெண்களின்
சரும பராமரிப்பில் தனிச்சிறப்பு பெற்றது கற்றாழை. சருமம் பளபளப்பாக
இருப்பதோடு பல்வேறு சரும நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும்
கற்றாழை உதவுகிறது. சோற்றுக் கற்றாழையை வெட்டி எடுத்து, அதில் சிறிது
மஞ்சள் பொடியைக் கலந்து குழைத்து, உடல் முழுவதும் தேய்க்க வேண்டும்.
அதன்பிறகு அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான சுடுநீரில் குளிக்க
வேண்டும். இது போல் வாரத்துக்கு இரண்டு நாள் குளித்து வந்தால் பெண்களின்
சருமம் மிளிரும். பேரழகி என்று வர்ணிக்கப்படும் கிளியோபாட்ரா சோற்றுக்
கற்றாழையைப் பயன்படுத்தி தன்மேனி அழகை பாதுகாத்துக் கொண்டதாக வரலாற்றுக்
குறிப்புகள் உண்டு.
மலச்சிக்கலுக்கு
முழுமையான நிவாரணம்சோற்றுக் கற்றாழையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி,
ஆமணக்கு எண்ணெயில் கலந்து அத்துடன் சிறிது சின்ன வெங்காயம், சுக்கு, மிளகு,
திப்பிலி, சீரகம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி, லேகிய பதத்தில் தயார்
செய்து கொள்ள வேண்டும். மலச் சிக்கல் ஏற்பட்டு அவதிப்படும்போது இதனை ஒரு
ஸ்பூன் அளவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் முழுமையாக குணமாகும்.
கூந்தல்
வளர்ச்சிதேங்காய் எண்ணெய், சோப்பு, ஷாம்பூ போன்றவை தயாரிக்கும்போது,
அவற்றுடன் கற்றாழை கலக்கப்படுகிறது. கற்றாழை பால் எடுத்து அதை தேங்காய்
எண்ணெயில் கலந்து காய்ச்சி ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து தலைக்கு தேய்த்து
வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து, முடி கருமையாக இருக்கவும், நன்கு
வளர்வதற்கும் உதவுகிறது.
புண்களை
ஆற்றும் கற்றாழைகாயங்கள் ஏற்பட்டவுடன் கற்றாழையின் சோற்றை எடுத்து அதன்
மீது தடவிவர கொப்பளங்கள் மறைந்து புண்கள் குணமாகும். அல்சர் என்கிற
வயிற்றுப்புண், மூலநோய் போன்றவற்றுக்கும் சோற்றுக் கற்றாழை சிறந்த
நிவாரணம். வாய்ப்புண் மற்றும் நாக்கில் ரணம் வந்து அவதிப்படுபவர்கள்
கற்றாழையை வெந்தயப்பொடி கால் ஸ்பூனுடன் கலந்து சாப்பிட்டுவந்தால் புண்கள்
ஆறும். அலெக்ஸாண்டருக்கு உதவிய கற்றாழை!
ஆசியா,
ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களை வெற்றி கொண்ட பிறகு, அடுத்த
போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் மாவீரன் அலெக்ஸான்டர். தொடர்ந்து
போர்க்களத்திலேயே வீரர்கள் இருந்ததால் என்ன செய்வது என்று குழப்பம்
அலெக்ஸாண்டருக்கு வந்தது.
உடனே தன்னுடைய குருவான அரிஸ்டாட்டிலிடம் ஆலோசனை கேட்டார்.
உடனே தன்னுடைய குருவான அரிஸ்டாட்டிலிடம் ஆலோசனை கேட்டார்.
அப்போதுதான்
சோற்றுக் கற்றாழையைத் தொடர்ந்து 15 நாட்கள் காயங்களின்மீது தடவி வந்தால்,
புண்கள் ஆறும் என்று ஆலோசனை கூறினார் அரிஸ்டாட்டில். கற்றாழையைப்
பயன்படுத்தி வீரர்களின் காயங்களை குணமாக்கிய பிறகு மீண்டும் பழைய
உற்சாகத்தோடு போருக்கு வீரர்களை அழைத்துச் சென்று மேலும் பல வெற்றிகளைப்
பெற்றார் அலெக்ஸாண்டர்.
யார் சாப்பிடக்கூடாது?
கற்றாழை
குளிர்ச்சியானது என்பதால் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற பிரச்னைகள்
இருப்பவர்கள் சோற்றுக் கற்றாழை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
வீட்டில் வளர்க்கும் முறை
கற்றாழை
ஒரு செடி வைத்தால் அதனருகே சிறிய சிறிய செடிகளாக வளரக்கூடியது. இதுபோன்ற
ஒரு சிறிய செடியை அடிவேருடன் எடுத்து சின்ன சின்ன தொட்டிகளில் வைத்து
வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். தோட்டங்கள் போன்ற மண் தரையில் ஒரு இடத்தில்
ஒரு செடியை வைத்து நீரூற்றி வந்தால், பக்கத்திலேயே அடுத்தடுத்து சிறுசிறு
செடிகளாக வளர்ந்து பல்கிப் பெருகக்கூடியது கற்றாழை.
“பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை”
.
இதற்கு தழிழ் மெய் உலகம் பல்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இதை உணர்து இத்தாவரத்துக்கு “குமரி” என பெயர் இயம்பி இழமையை நிலைத்து முதுமையை விரட்டிடும் அற்புதமுகிலிகையாக இயம்பியிருக்கின்றது. மானிடப் பிறவியின் அர்த்தம் புரிந்து மானிடர்க்காக வாழ்ந்த சித்தார்கள் இதை புரிந்திருந்தனர். அனுபவ அறிவால் நுன்மதி நுளை புலத்தால் அவர்களின் தெய்வீக அற்றலால் வெளிப்படுத்தினர்.
.
இதற்கு தழிழ் மெய் உலகம் பல்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இதை உணர்து இத்தாவரத்துக்கு “குமரி” என பெயர் இயம்பி இழமையை நிலைத்து முதுமையை விரட்டிடும் அற்புதமுகிலிகையாக இயம்பியிருக்கின்றது. மானிடப் பிறவியின் அர்த்தம் புரிந்து மானிடர்க்காக வாழ்ந்த சித்தார்கள் இதை புரிந்திருந்தனர். அனுபவ அறிவால் நுன்மதி நுளை புலத்தால் அவர்களின் தெய்வீக அற்றலால் வெளிப்படுத்தினர்.
தேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் குமரியின் மருத்துவ பண்பை “பொல்லா மேகம் கபம் புல் சூலை
குட்டம் ரசம் அல்லார் மந்தம்
பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்
குமரிக்கு மருண்டு”
பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்
குமரிக்கு மருண்டு”
1.“பொல்லா
மேகம்”: இது சக்கரை நோயைக் குறிக்கின்றது. இதனை மேகத்துக்கு
ஒப்பிடுகின்றார். மேகமானது தோன்றி மறைவதுடன் திரும்பத் திரும்ப தோன்றுவதும்
மேகங்கள் உயர்வதும் தாழ்வதும் அதன் இயக்கையான குணமாமும் இதையொத்த
பண்புடையது சக்கரை நோயாகும். இன் நோயைப் போக்கும் தன்மை குமரிக்கு உண்டு.
2.“கபம்”:
கபம் என்பது நாசி, தொண்டை, நெஞ்சிப்பகுதியில் சளி கட்டி உடலை
உபாதைக்குட்படுத்தும். இதனை கிராமப்புறங்களில் சளிபிடித்தால்
சனிபிடித்தமாதிரி என்று இயம்புவதுண்டு அவ்வளவு அவத்தைப்பாடுத்தும்.
கண்டத்தில் கபம் கட்டி சுவாசத்தை தடை செய்து உடல் இயக்கத்தை நிறுத்தக்கூடிய
தன்மையானது கபம். நெருப்பெரிய ஒட்சிசன் தேவை ஒட்சிசன் இல்லாவிட்டால்
நெருப்பு அனைந்து விடும். இது போன்றே பிரபஞ்கம் இயங்க பிராணவாயு தேவை.
அதுபோன்று உடல் இயங்க ஆத்துமா வாகிய அக்கினி பிரகாசிக்க வேண்டும். அதற்கு
பிராணவாயு கண்டத்தின் வழியாக செல்ல வேண்டும். அதை கபம் தடைசெய்யும் இச்
சந்தர்ப்பாத்தில் வாயால் சுவாசிக்க நேரும் இதனை “மோவாய் சுவாசம்”என்பர்.
இது போன்று ஒரு மனிதன் இறப்பதற்கு முன்னர் சுவாசம் நெஞ்கிப்பகுதிக்கு மேல்
சுவாசம் இழுத்துக் கொண்டு இருக்கும் இதனை “சேப்பம் கட்டி இழுக்குது”
என்பர். சேப்பம் என்பது கபம் இறுதியாக உடலிலிருந்து உயிரை பிரிக்க கபம்
உதவுகின்றது. அப்படிபட்ட கபத்தை இல்லாமல் செய்யும் ஆற்றல் குமரிக்குண்டு.
குமரி
குளிர்த்தன்மையானது. இது கபத்தை உருவாக்கக்கூடியது எனலாம். இதன் தன்மை
கபத்தை இல்லாமல் செய்துவிடும் தன்மையுள்ளது. ஆரம்பத்தில் சளியை ஏற்படுத்தி
பின்னர் தெடர்ந்து உண்டுவர நோய் எதிப்புச் சக்தியை உருவாக்கி கபத்தை
அடியோடுடொலித்து விடும் சக்தி பெற்று விடும் குமரி. குமரியைப்
பயன்படுத்துவதில் கவனம் தேவை பொதுவாக கபத்தினால் உண்டாகும்
அஸ்டுமா,கடுமையான ஜலதோம், சைனஸ் வருத்தங்கள் உள்ளவர் நிதானத்துடன்
தவித்துக் கொள்வது நன்று. பொதுவாக குளிர்சியைத் தரும் தன்மை குமரிக்கு
உண்டு. அதேவேளை சளியைத் தடுக்கும் வல்லமையும் குமரிக்கு உண்டு. சிறிது
சிறிதாக நாளுக்கு நாள் உணவாக சேர்த்து வர காலப்போக்கில் நோய்எதிப்பு
சத்தியைப் பொற்று விடும் உடல் அதன் பின்னர் கபம் தனது சக்தியை இழந்து
விடும். வயதானவர்களுக்கு மார்புப் பகுதியில் கபம் கட்டுவது இயல்பு இதனால்
உடல் நல்ல திடகாத்திரத்தை இழந்து விடும் அச்சந்தப்பத்தில் குமரியை உணவாக்கி
திடகாத்திரத்தைப் பெறமுடியும் எனவே குமரி ஓர் காயகற்ப முகிலிகையாகும.
3.“புல்
சூலை”: உடலில் குடலில் புழுக்கள் ஒட்டுண்ணியாக இருப்பது உடலில் உள்ள
சத்துப்பொருட்களை உறுஞ்சி குடித்து தேகாரோக்கியத்தை இழக்கச் செய்வது இயல்பு
பல்வேறு நோய்களை ஏற்ப்படுத்தும். இப்படிப்பட்ட புழுக்களை அகற்றும் ஆற்றல்
குமரிக்கு உண்டு.
4.“சூலை”:
சூலை என்பது கணுக்களில், கபாலத்தில்,வயிற்றில், குடலில் வரும். கணுக்களில்
வரும்போது கணுச்சூலை என்றும் கபாலத்தில் ஏற்படுகின்ற போது கபாலைச்சூலை
அல்லது சிரசூலை என்றும் குடலில் வருகின்ற போது குடல்சூலை என்றும்
இரைப்பையில் வருகின்ற போது சூலை நோய் என்றும் குறிப்பிடுகின்றனர். சூலையின்
வேதனை சூலத்தால் குத்துவதை ஒத்தவலியை போன்றது. இது உஸ்னத்தால் உண்டாவது
இதை தடுக்கும் ஆற்றல் குமரிக்கு உண்டு. சங்கால இலக்கியம் குமரியின் தன்மையை
“குமரியின் சாற்றை உண்டு குடல் புண் ஆறக்கண்டேன்” என்று கூறுகின்றது.
கருக்குடலில் இருக்கும் பினிகளுக் கெல்லாம் அருமருந்து குமரி
5.“குட்டம்”:
தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து
அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல்
குமரிக்குண்டு.
6.“ரசம்”:
எலும்பு மச்சையை ரசம் என்று அழைப்பதுண்டு எலும்பு மச்சையில் உள்ள
சத்துக்கள் குன்றிப்போனால் சிவப்பணுக்களின் உற்பத்தி தடைப்படும் இதன்
விளைவால் இரத்தத்தை நரம்பு வளியாக இலுத்துக் செல்லும் பிராணவாயுவின் அளவு
குறைவடைந்து நாம் செயல்படும் செயலாற்றல் குறைவடையும் இதனால் இளமையில்
முதுமையை எதிர் நோக்க விளையும் அத்துடன் வெளுப்பு நோய்க்கு ஆட்படுவோம்.
இன்நிலையிலிருந் எம்மை காக்க குமரி ஓர் அருமந்தாகும். இது சிவப்பணு
உற்பத்தியை அதிகரித்து எம்மை பலமிக்தாக்கும் தன்மை குமரிக்கு உண்டு.
7.“மந்தம்”:
மந்தம் என்பது ஐPரணக்குறைபாடு இயல்பான வேகத்தில் குறைபாடு இதனால் ஏற்படும்
அஐPரணம் வயிற்று பொருமலாக இருக்கும் இதன் மூலம் உடலில் அமிலம் சுரந்து
அசாதாரன நிலையை ஏற்படுத்தும் இவ்வாறன நிலையிலிருந்து குமரி எம்மைப்
பாதுகாக்கும்.
8.
“பகம் தரும்”: பகர்தரும் என்பது ஆசன வாசலில் ஏற்படும் புண்ணும் சீளுமான
நிலை இதை வயல் வெளியில் சேறும்சகதியுமாக இருக்கும் நிலைக்கு ஒப்பிடுவர்.
இது மூலநோயின் ஒருவகை இதனால் குத்துகின்றது போன்ற வலியும் எரிச்சலும்
கடுப்புடண் கூடிய வலியும் ஆசனவாசலால் இரத்தக்கசிவுள்ள பல பண்புகளைக் கொண்ட
மூலரோகம் உழையும் மூலரோகம் எனப்படும். மூலநோய் என்பது பலவகை உண்டு
உள்மூலம், வெளிமூலம், உதிரமூலம், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயில் திறவு
இன்னுமோர் மேலதிக பாதை போல் தோன்றும் இயல்பு இதை பவித்திரம் என்பார்கள்
இதனை போக்க வவ்லது குமரி.
9.“குன்மம்
எல்லாம் விட்டு ஏகும்”: அஜினத்தால் ஏற்படும் நோய் குன்மம் இப்படிப்hட்ட
நோய்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிடும் எனக்குறிப்பிர்வதுடன்.
10.
“அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்”: கிரிச்சரம் என்பது
சிறுநீர்த்தாரையில் சிறுநீர் வரும் பாதையில் அரிப்பும் எரிச்சலும் இருந்து
அளொகரியத்தை ஏற்படுத்துகின்ற நீர்த்தாரை நோய் இதற்கு குமரி அருமருந்து .
பயன் படுத்தும் முறைகள்:
சோற்றுக்கற்றாழை(குமரி)யின்
தொலை நீக்கி சோற்றை எடுத்து அதை ஏழு முறை சுத்மான நீரில் திரும்பத்திரும்
புதிய புதிய நீரினால் கழுவி சுத்தம் செய்து அதிலுள்ள அலோயின் என்ற சத்தை
நீக்கிவிட வேண்டும். இது கொளுகொளுப்பாக இருக்கும் இதை நீக்கியபின் மருத்து
உயயோகத்துக்கு உகந்தாக அமையும். தாழையின் மடலைத் தெரிவு செய்கையில்
பின்வரும் விடையங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
1.
கற்றாழை மரத்தின் முதிர்வு ஆகக்குறைந்தது ஒன்றரைவருடத்தை
பூர்திசெய்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் முழுமையான மருத்துவ
பண்புகள் நிறைந்தாக இருக்கும். வேதியல் மூலக்கூறுகளை முழுமையாக
பெற்றிருக்கும்.
2.
தாழை ஓலை மரத்திலிருந்து வெட்டி எடுத்து அரைமணித்தியாலத்;துக்கும் ஒரு
மனித்தியாலத்துக்கும் இடையில் தோலை நீக்கி சுத்தம் செய்தல் உத்தமம்.
ஆனாலும் நான்கு மணித்தியாலத்துக்கு மேல்படுதலாகாது.
3.
இவ்வாறு எடுத்து கொள்வதன் நோக்கம் உடலில் சத்து பொருளைகளை படிப்படியாக
சேர்த்துக் கொள்வதே இதன் நோக்கம் இப்படி முறையான செயல் பாட்டுக்கு
காரணமாகும்.
4.
ஏக்கனவே கபம் அதிமாகி இளை நோய்க்கு ஆளானவர்களும் பினிச நோக்கு
ஆளானவர்களுடம் வைத்தியரின் ஆலோசணையுடன் குமரியை உபயோகித்தொடங்குவது
சிறந்தது.
உகயோகிப்பதானால்
தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ஆலோபதி மருந்துடன் சேர்த்து
பயன்படுத்தி காலப் போக்கில் ஆலோபதி மருந்துகளை நிறுத்திக் கொள்ள முடியும்.
பொதுவாக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளல் நன்று.
5. முதுமையால் உண்டாகும் மூட்டுவலி முட்டிவலி மூட்டுக்களில் வழுவின்மை போன்ற நோய்களுக்கு குமரியை தோலுடன் இரண்டு சதுரடி அளவு எடுத்து அதனுடன் இஞ்சி, மஞ்சல் சமனிடை சேர்த்து விழுது போல் அரைத்து சாதுவாக சூடாக்கி மூட்டுகளில் பற்றுப்போல் நன்றாக பூசி காயவிட மூட்டுவலி, வீக்கம் என்பன நீங்கி சுகம் பெறலாம். இது போன்று காலை மாலை பற்றிடலாம்.
5. முதுமையால் உண்டாகும் மூட்டுவலி முட்டிவலி மூட்டுக்களில் வழுவின்மை போன்ற நோய்களுக்கு குமரியை தோலுடன் இரண்டு சதுரடி அளவு எடுத்து அதனுடன் இஞ்சி, மஞ்சல் சமனிடை சேர்த்து விழுது போல் அரைத்து சாதுவாக சூடாக்கி மூட்டுகளில் பற்றுப்போல் நன்றாக பூசி காயவிட மூட்டுவலி, வீக்கம் என்பன நீங்கி சுகம் பெறலாம். இது போன்று காலை மாலை பற்றிடலாம்.
குமரி
குளிர்மையானது இதை பாவிக்க ஆரம்பிக்கும் போது இது முதலில் கபத்தை
உருவாக்கி பின்னர் எதிப்புச் சத்தியை உடலில் ஏற்படுத்தி உடலை
கபத்திலிருந்து காத்து ஸ்திரப்படுத்தும்.
No comments:
Post a Comment