Thursday 16 June 2022

கிராம ஊராட்சிகளில் (பஞ்சாயத்து) பராமரிக்க வேண்டிய 31 வகையான பதிவேடுகள்

 கிராம ஊராட்சிகளில் (பஞ்சாயத்து) பராமரிக்க வேண்டிய 31 வகையான பதிவேடுகள் 


1. வீட்டு வரி கேட்பு தொகை அறிவிப்பு:


வீடு உரிமையாளரின் பெயர் விவரம், வீட்டின் வகைப்பாடு,
செலுத்த வேண்டிய வீட்டு வரி ஆகியவற்றின் விவரத்துடன் வீட்டு உரிமையாளருக்கு அனுப்ப வேண்டிய அறிவிப்பாகும்.

2. வீட்டு வரி ரசீதுக்கள்:
வீட்டு வரி செலுத்துபவருக்கு அளிக்கப்படும் ரசீதாகும்.

3. வீட்டு வரி, நிலுவைத்தொகை, நடப்பு வரி தொகை, கேட்பு தொகை பதிவேடு:
இப்பதிவேடு ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். புதிதாக வீட்டு வரி செலுத்த வேண்டியிருப்பின் அதிலேயே சேர்த்துக் கொள்ளலாம் / நீக்கம் செய்யலாம். இப்பதிவேட்டின் முதல் பக்கத்தில் வீட்டு வரி நிர்ணயம் செய்யப்பட்ட தீர்மானத்தை இணைக்க வேண்டும்.
 
4. தொழில் வரி ரசீது:
தொழில் வரி செலுத்துபவர்களுக்கு அளிக்கப்படும் ரசீதாகும்.

5. தொழில் வரி (நிலுவை தொகை, நடப்பு வரி தொகை) கேட்பு தொகை பதிவேடு:
தொழில் வரி செலுத்துபவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் பதியப்பட வேண்டும்.

6. பல் வகை ரசீது:
பல வகையான கட்டணங்களுக்கு ஊராட்சியில் பெறப்படுவதற்கு அத்தாட்சியாக அளிக்கப்படுகின்ற ரசீதாகும்.

7. ஊராட்சி வரிகள் மற்றும் பல்வகை இனங்களின் வசூல் பதிவேடு:
வீட்டு வரி,
தொழில் வரி,
மற்றும் விளம்பர வரி,
இதர ஊராட்சியில் நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள் ஆகியவற்றை வசூல் செய்த விவரங்களை தொகுத்து எழுதும் பதிவேடு.

8. ஊராட்சிக்கு வரப்பெறும் மானியங்கள் மற்றும் ஒதுக்கீடு விவரப் பதிவேடு:
மாநில நிதி மானியம் மற்றும் ஒதுக்கீட்டு வரவினங்கள் வரவுகளை குறிக்கும் பதிவேடாகும்.

9. கிராம ஊராட்சி சிட்டா:
தினந்தோறும் பெறப்படும் வரவினங்கள் பதியப்பட வேண்டும்.

10. ஊராட்சி பல்வகை கேட்பு, வசூல் நிலுவை பதிவேடு:
1. மீன் பாசி,

2. கட்டிட குத்தகை,

3. பச்ச மகசூல் ஆயுத்த தொகை,

4. சந்தை குத்தகை,

5. பேருந்து நிலைய குத்தகை வசூல் ஆகிய வரியினங்கள் மற்றும் குத்தகை கட்டணங்கள், இதர கட்டணங்கள் ஆகியவற்றின் கேட்பு வசூல் மற்றும் நிலுவை பதியப்பட வேண்டும்.

11. ரொக்க புத்தகம் (1வது கணக்கு (பொது நிதி):
ஒவ்வொரு நிதி கணக்கிற்கும் தனித்தனியே ரொக்க புத்தகம் பதிவு செய்யப்பட வேண்டும்.

12. ஊராட்சி முன் பணங்கள் பதிவேடு:
முன் பணம் அளித்தல் இந்தப் பதிவேட்டில் பதியப்பட்ட பின்னரே முன் பணம் வழங்கப்பட வேண்டும்.

13. தலைப்பு வாரியாக செலவு பதிவேடு அல்லது ஒப்புதல் அளிக்கப்பட்ட பட்டியல் பதிவேடு:
பட்டியல் அனுமதிக்கப்பட்ட பின்னர் ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாக வழங்கப்படும் அனைத்து இனங்களும் பதியப்பட வேண்டும்.

14. தொகை ஏற்பளிப்பு பதிவேடு:
கொடுக்கப்படுகின்ற பணத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டிய பதிவேடு.

15. மதிப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடு பற்றிய பதிவேடு:
(கிராம ஊராட்சி நிதிக்கணக்கு) ஊராட்சி நிதி மூலம் எடுக்கப்படும் பணிகளுக்கு மதிப்பீடு மற்றும் வரவுசெலவு அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு தொகை ஆகியவற்றை பதிவு செய்யப்பட வேண்டும்.

16. கிராம ஊராட்சியின் சொத்துக்கள் மற்றும் தளவாடங்கள் பற்றிய பதிவேடு:
ஊராட்சி நிதி மூலம் ஏற்படுத்தப்படும் அனைத்து சொத்துக்களின் விவரங்கள் மற்றும் ஊராட்சிகளின் சொத்துக்கள் இனவாரியாக பதிவு செய்யப்பட வேண்டும்.

17. கை பம்பு, விசை பம்பு, தெரு விளக்கு, OHT பராமரிப்பு, சாலை பாராமரிப்பு பதிவேடு:
ஊராட்சி சொத்துக்கள் பராமரிப்பு செலவுகள் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும்.

18. தெரு விளக்கு பொருட்கள் கைப்பம்புகளின் உதரி பாகங்கள், பொது சுகாதாரம் தொடர்பான பொருட்கள் மற்றும் ஏனைய பயனீட்டு பொருட்கள் பதிவேடு:
ஊராட்சியில் வாங்கப்படும் அனைத்து பொருட்கள் விவரங்களின் இருப்பு பதிவு செய்யப்பட வேண்டும்.

19. செலவு சீட்டு படிவம்:
பட்டியல் தயார் செய்யும் படிவம்.

20. பண மதிப்பு (படிவங்கள் குறித்த இருப்பு) பதிவேடு:

1. வீட்டு வரி ரசீது புத்தகம்,

2. தொழில் வரி ரசீது புத்தகம்,

3. பல்வகை ரசீது புத்தகம்,

4. அளவை புத்தகங்கள்,

5. ஒப்பந்த படிவங்கள்,

6. எழுது பொருட்கள் இருப்பு புத்தகம்,

7. வைப்புத் தொகை பத்திரங்கள்,

8. ஊராட்சியில் வரப்பெற்ற காசோலை / வங்கி வரவுகள் ஆகிய இருப்பு வழங்கள் விவரங்களை குறிப்பிட வேண்டும்.

21. கழிவு செய்யப்பட்ட பொருட்களின் இருப்பு பதிவேடு :
பழுதடைந்த மற்றும் உபயோகமற்ற பொருட்களின் இருப்புக்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.வழக்கறிஞர் திருச்சி திலீப் வட்சப் என்96777-06622

22. ஊராட்சியின் சிமெண்ட், தார் உருக்கு கதவுகள், சன்னல்கள், மற்றும் கட்டுமான பொருட்கள் குறித்த இருப்பு பதிவேடு:
ஊராட்சியில் மூலம் பெறப்பட்ட சிமெண்ட், இரும்பு கதவுகள், சன்னல்கள், தார் மற்றும் இதர பொருட்களின் இருப்பு பதிவு செய்யப்பட வேண்டும்.

23. ரொக்க புத்தகம் (2வது கணக்கு):
ஊராட்சியின் மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் குறித்த வரவு செலவு விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

24. தலைப்பு வாரியாக வரவு செலவுப்பதிவேடு (2வது கணக்கு):
ஊராட்சியில் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் பற்றிய செலவு விவரங்களை பதிவு செய்யப்பட வேண்டும்.

25. மதிப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடுகள் பற்றிய பதிவேடு (2 வது கணக்கு):
தற்போது 2 வது கணக்கில் வேலைகள் ஏதுவும் எடுத்துச் செல்லும் அவசியம் இல்லை. எனவே, இப்போது இப்பதிவேட்டில் பதிவு செய்யும் அவசியம் இல்லை .

26. ரொக்க பதிவேடு புத்தகம்
(திட்ட நிதிக்கணக்கு):
கிராம ஊராட்சி திட்ட நிதிக்கணக்கு வரவு மற்றும் பணிகள் செய்த செலவு விவரம் இப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

27. தொகை வரவுகள் மற்றும் செலவுகள் பதிவேடு (திட்ட நிதிக்கணக்கு):
இந்திரா குடியிருப்பு திட்டம் இதர திட்டங்களின் மூலம் செலவிடப்படும் செலவு விவரம் இதில் தலைப்பு வாரியாக பதியப்படும்.

28. திட்டப் பணிகள் பதிவேடு:
கிராம ஊராட்சியில் திட்ட நிதியில் செய்யப்படும் பணிகள் குறித்து பதியப்படும் மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள் பற்றிய பதிவேடு.

29. திட்டத்தின் மூலம் தனிநபர் பயனடைந்த பயனாளிகளின் விவரம் அடங்கிய பதிவேடு:

1. இந்திரா குடியிருப்பு திட்டம்,

2. முதலமைச்சர் பசுமை வீடுகள் திட்டம்,

3. தனிநபர் கழிப்பறை திட்டம்,

4. சான எரிவாயு திட்டம்,

5. சூளா திட்டம் மேற்படி திட்டம் தவிர , மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது அறிவிக்கப்படும் திட்டங்களின் கீழ் பயன்பெற்றும் தனி நபர் பயனாளிகளின் விவரங்களை பதிவு செய்யப்பட வேண்டும்,

30. மாதந்திர கணக்குகள் (வரவு செலவு) படிவம்:
கிராம ஊராட்சியின் ஒப்புதல் பெற்ற பின்னர் ஆய்வாளருக்கு அனுப்பப்பட அனைத்து கணக்குகளுக்கான வகைப்படுத்தப்பட்ட வரவு-செலவு குறித்த மாதாந்திர அறிக்கை

31. நிதி நிலை (ஆண்டு வரவு-செலவு) படிவம்:
ஆண்டின் வரவு செலவு விவரமும் எதிர்வரும் ஆண்டிற்கான உத்தேசமான மேற்கொள்ள உள்ள வரவு செலவு விவரமும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்,

ஊராட்சியில் உள்ள மொத்த வங்கி கணக்குகளின் விபரம் :

1. கிராம ஊராட்சி நிதி கணக்கு,

2. தமிழ்நாடு மின்சார வாரியம்/தமிழ்நாடு வடிகால் வாரியம்/மாவட்ட ஆட்சியர் கொடுப்பு கணக்கு,

3. கிராம ஊராட்சி மத்திய திட்ட நிதி கணக்கு,

4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி கணக்கு,

5. மாநில நிதி கணக்கு,

6. முதலமைச்சர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்ட கணக்கு,

7. கிராம ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதிய கணக்கு,

8. கிராம ஊராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட கணக்கு,

9. கிராம ஊராட்சி மத்திய நிதி குழு மானியத் திட்டம் கணக்கு,

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...