மனித உடல்
பொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரும்ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சிலருக்கு ஜுரம் கூட வந்துவிடும், இது ஏன் என்றால், வெயல் காலத்தில் நம் உடலில் இருக்கும் தோலின் மீது காணப்படும் கண்ணுக்குத் தெரியாத சிறிய ரோமங்களுடன் காணப்படும் துவாரங்களின் கீழே சிறிய கொழுப்புத் திவலைகள் உண்டு இவை கடும் வெயல் மற்றும் குளிர் மழை போன்ற சீதோஷ்ண மாற்றங்களிலிருந்து நமது உடலின் வெப்பத்தை சீராகுவதற்க்கும் வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகின்றது, வெயலின் சூட்டில் அந்த கொழுப்புத் திவலைகள் உருகுவதால் சிறிய துவாரங்கள் முழுவதுமாக திறந்து கொண்டு வியர்வை தூசு போன்றவை அதன் வழியே உடலின் உள்ளே சென்று விடுகின்றது, அதிலிருக்கும் கிருமிகள் வியர்வையுடன் சேர்ந்து அரிப்பை உண்டாக்குவதுடன் ஜுரம் ஜலதோஷம் போன்ற உடற் உபாதைகளையும் ஏற்ப்படுத்துகின்றது.
சிலர் வெயலின் சூட்டிலிருந்து உடல் குளிர்ச்சியடைவதற்க்காக சுத்திகரிக்கப்படாத ஐஸ் தண்ணீர் ஐஸ் மோர், மற்றும் குளிர் பானங்களை கடைகளிலிருந்தும் ரேப்பிட்ஜிரேடோரிலிருந்தும் எடுத்து அடிக்கடி குடிப்பார்கள் அப்படி செய்வதால் அந்த பானங்களில் காணப்படும் வைரஸ் மற்றும் அமீபியாக் கிருமிகள் உடலினுள் சென்று வயிற்றுவலி, ஜுரம் போன்ற உடற் பாதிப்புகளை ஏற்ப்படுத்தும்.
கடும் மழையில் நனைவதாலோ கடும் குளிரில் நடப்பதாலோ பொதுவாக பலருக்கும் ஜுரம் மற்றும் ஜலதோஷம் போன்ற உடற்உபாதைகள் ஏற்ப்படுவது கிடையாது, இதற்க்குக் காரணம் உடலின் தோல்பாகத்தில் காணப்படும் சிறிய ரோமத் துவாரங்களின் அடிப்புறத்தில் காணப்படும் கொழுப்புத் திவலைகள் இறுகி துவாரங்களை அடைத்துக் கொண்டிருப்பதனால் அதன் வழியே குளிர்ச்சியோ மழை நீரோ உட்புகுந்து உடலில் எந்தவித பாதிப்பையும் ஏற்ப்படுத்தாமல் தவிர்க்கின்றது. இதனால் அதிக மழையில் நனைந்தாலும் கூட மழைக் காலங்களில் பலருக்கு ஜுரமோ ஜலதோஷமோ பிடிப்பதில்லை.
குளிர் பிரதேசங்களில் ஜாகிங் செய்வதனால் உடலிலிருந்து வெளியேற்றப்படும் உஷ்ணம் மற்றும் கழிவுகள் வியர்வையின் மூலம் ரோமத்துவாரங்களின் வழியே வெளியேற வழியில்லாமல் தடைப்படுவதாலும் ரத்த அழுத்தம் அதிகரித்து இருதயத்தின் செயல்பாடு பாதிப்படைந்து மரணம் நேருவதையும் நாம் கேள்விபட்டிருப்போம், இதற்கும் இந்த ரோமத் துவாரங்களும் காரணம். ரோமத்துவாரங்களின் வழியே வெளியேறும் வியர்வை போன்றே ரத்தத்திலுள்ள கழிவுகளை சிறுநீரகம் சிறுநீராக ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து தோலின் அடிப்புறத்திலிருக்கும் சிறிய துவாரங்களின் வழியேவெளியேற்றுகிறது, உடலின் மிகப்பெரிய உறுப்பாக தோல் நம்முடலில் இருப்பதால் அதன் உபயோகமும் அதிகம்.கோடைக்காலத்தில் சிறுநீரகத்தின் வேலைக் குறைந்து அதே பணியை தோல் செய்ய ஆரம்பிக்கிறது, இதனால் கோடையில் சிறுநீர் வெளியேற்றம் குறைவாகக் காணப்படுகிறது. தோலைப் மற்ற உடலுறுப்புகளைப் போல மிகவும் கவனத்துடன்பராமரித்தால் உடலில் பல சுகவீனங்கள் வருவதை தவிர்க்கமுடியும்.
நிறைய நீர் பருகுவதால் ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தோலும் சிறுநீர் உறுப்புகளும் சுத்திகரிக்கப்படுவதுடன் சரிவர இயங்க முடியும் பலவித உடல் உபாதைகள் வருவதை தவிர்க்க முடியும். அதிக குடிநீர் பருகியும் வியர்வையும் வராமல் சிறுநீரும் குறிப்பிடும்படியாக மிகக் குறைவாக வெளியேறும் போது மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. அதிகமாக காப்பி குடிப்பதனால் காப்பியில் உள்ள கபைன் சிறுநீரகத்தை சீரழியச் செய்யும் சக்த்தியுடையது என்று ஆய்வுகள் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாக்குமூலங்களையும் நாம் காணலாம், இந்த மூன்று உடலுறுப்புகளும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு உடையதாக இருப்பதால் உடல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறது. சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகி பாதி கட்டத்திலோ கடைசி கட்டத்திலோ இருக்குவரையில் பலருக்கு அதற்கான மாற்றங்களை உடல் வெளிப்படுத்தாமல் இருந்துவிடும் மருத்துவ வரலாறுகளும் உண்டென்கிறது மருத்துவம். காப்பி குடித்தாலே இந்த நிலையென்றால் மது வகைகளும் லாகிரி வஸ்த்துக்களும் உடலை எந்த அளவிற்கு நாசமாக்கும் என்பதை சொல்லவே வேண்டாம்.
மரணம் என்பது யாருக்கு எப்படி எந்த வகையில் வரும் என்பதை யாரும் முன்பே அறிய முடியாது என்றாலும் அறிந்தே உடலை பாதிப்பிற்க்குள்ளாக்குவதை தவிர்க்கலாமே இதனால் நாமும் நம்மை சுற்றி இருக்கும் நமது குடும்பத்தாரும் அல்லலுற வேண்டாமே.
No comments:
Post a Comment