Friday, 13 March 2015

அந்த காலத்தில் கணிதமும் தமிழர்கள் வரலாறு

அந்த காலத்தில் கணிதமும் தமிழர்கள் வரலாறு 01(decimal calculation)




                 
தமிழக கோவில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைபாடுகலாகட்டும்,   தூண்களில் ஒரு நூல் இல்லை கூட கோணல் இல்லாமல் கட்டப்பட்ட 1000 கால் மண்டபங்கள் ஆகட்டும், 1000 ஆண்டுகளாக இயற்க்கை சீற்றங்களால் கூட சிறு தேய்வுகள் இன்றி, எந்த வண்ண பூச்சும் இன்றி  நிமிர்ந்து நிற்கும் தஞ்சை கோபுரம் ஆகட்டும்.  இன்னும் ஆதி தமிழர்கள் செய்த பற்பல அற்புதமான விஷயங்கள் பற்றி வியப்புடன் பேசும் நாம் இதை பற்றிய தேடலை மேற்கொண்டோமா? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விஷத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....

1 -
ஒன்று
3/4 -
முக்கால்
1/2 -  
அரை கால்
1/4 -
கால்
1/5 -
நாலுமா
3/16 -
மூன்று வீசம்
3/20 -
மூன்று மா
1/8 -
அரைக்கால்
1/10 -
இருமா
1/16 -
மாகாணி (வீசம்)
1/20 -
ஒருமா
3/64 -
முக்கால் வீசம்
3/80 -
முக்காணி
1/32 -
அரைவீசம்
1/40 -
அரிமா
1/64 -
கால்வீசம்
1/80 -
காணி
3/320 -
அரைக்காணி முந்திரி
1/160 -
அரைக்காணி
1/320 -
முந்திரி
1/102400 -
கீழ் முந்திரி
1/2150400 -
இம்மி
1/23654400 -
����மி
1/165580800 -
அணு  --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 -
குணம்
1/7451136000 -
பந்தம்
1/44706816000 -
பாகம்
1/312947712000 -
விந்தம்
1/5320111104000 -
நாகவிந்தம்
1/74481555456000 -
சிந்தை
1/489631109120000 -
கதிர்முனை
1/9585244364800000 -
குரல்வளைபடி
1/575114661888000000 -
வெள்ளம்
1/57511466188800000000 -
நுண்மணல்
1/2323824530227200000000 -
தேர்த்துகள்.

அடேங்கப்பா எந்த மொழியிலும் இல்லாத decimal calculation !!!!!!!

           nano particle
தான் மிக சிறியது என்று உலகமே பேசிகொண்டிருக்கையில் நம் முன்னோர்கள் அதைவிட சிறிய துகளுக்கு கூட calculation போடிருக்கிரார்கள் என்றால் மிகவும் வியக்கத்தக்க ஒன்றே.
 
இவ்வளவு கணிதமும் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது!!!!!
           
இந்த எண்களை வைத்தே நுணுக்கமான பல வேலைகளை செய்துள்ளனர் என்றால் நம் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் எண்ணி பாருங்கள்.
           
இன்றைக்கு உள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தை வைத்தே நம்மால் செய்ய இயலாத பல அற்புதங்களை அன்றே செய்து வைத்து விட்டனர்.
           
கால்குலேடரையும், தொழில்நுட்ப வளர்ச்சி என்று இளைய தலை முறை கூறிக்கொண்டிருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம், தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்...!!!
(
நான் இட்ட தலைப்புக்கும் உள்ளே இருந்த பொருளும் வேறுமாதிரியாக உள்ளதே என என்னலாம். வலைத்தளத்தில் பல தொடர் பதிவுகள் சென்றுகொண்டிருப்பதால் புது புது தலைப்புகள் இட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் இவ்வாறு இட்டுள்ளேன்.)

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...