Monday 29 December 2014

பெண்மையை போற்றுவோம் - அன்னை தெரேசா
     



அன்னை தெரேசா
பிறப்பு : ஆகஸ்டு 26 - 1910. அஸ்கப், ஓட்டோமான் பேரரசு (இன்றைய ஸ்கோப்ஜி,   மாக்கடோனியக் குடியரசு)
இறப்பு: செப்டம்பர் 5 1997 (அகவை 87). கொல்கத்தா, இந்தியா
தேசியம் :  அல்பேனியன் / இந்தியன்
அறியப்படுவது :  பிறர் அன்பின் பணியாளர் சபையின் நிறுவுனர்.
தொழில்:  ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, மனித நேய ஆர்வளர்
அன்னை தெரேசா (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997), ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரிஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின்கொல்காத்தாவில்(கல்கத்தா) மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் இவர். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.

1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும் புகழப்பட மேல்கம் முக்கெரிட்ஜ் -ன் சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட் என்ற விளக்கப்படமும் ஒரு காரணமாகும். இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980-ல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னாவும் பெற்றார். 

அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை விரிந்து கொண்டே சென்று, அவரது மரணத்தின் போது 123 நாடுகளின் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ்,தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.



அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்தரத்துக்கான அதிபரின் பதக்கத்தை 1985 ல் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள் இவரை புகழ்ந்து வந்திருக்கின்றன. எனினும் பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்துள்ளார்.இத்தகைய விமர்சனங்கள் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ், மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டச்சர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் அவரது உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டினையும், மதமாற்றத்தைக்குறிக்கோளாகக் கொண்ட அவரது யுத்திகளாகக் கருதி எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளாகும். பல மருத்துவப் பத்திரிகைகள், அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பிய வண்ணமும் இருந்தன.

1979 ல், அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

மரணத்திற்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்ற பட்டம் சூட்டப்பட்டார்.

அன்னை தெரெசாவுக்கு பலதரப்பட்ட விதங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு அருங்காட்சியகங்கள் மூலமாகவும், பல்வேறு சபைகளின் காவல் புனிதராக நியமிக்கப்பட்டதன் மூலமாகவும், விதவிதமான கட்டுமான அமைப்புகள் மற்றும் சாலைகளுக்கு அவரது பெயரை இட்டதின் மூலமாகவும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றின் ஆசிரியரான நவீன் சாவ்லா வால் எழுதப்பட்ட பல புகழ் மாலைகள் இந்திய நாளேடுகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.
Stamp-honoring :
  

             
                                      





No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...